Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!

12.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்


இன்றைய தொடக்கத்தில் 0.75 சதவிகிதம் இருந்த இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி விகிதம் தற்போது 1.33 சதவிகிதமாக இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 363.88 புள்ளிகள் அதிகரித்து 27869.31 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 107.85 புள்ளிகள் அதிகரித்து 8391.65 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை ஐந்து ரூபாய் குறைந்து 26,695 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 29 ரூபாய் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 3,429 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.38 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை சரிவு இன்னும் தொடர்கிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 57.33 அமெரிக்க டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 53.27 அமெரிக்க டாலராகவும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் டி எஃப் சி 3.89%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.87%
ஜிண்டால் ஸ்டீல் 3.32%
பி ஹெச் இ எல் 2.61%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 2.57%

இறக்கப் பங்குகள் :

பி பி சி எல் -0.55%
என் எம் டி சி -0.30%
ஹெச் யூ எல் -0.28%
ஹீரோ மோட்டோகார்ப் -0.18%

பஜாஜ் ஆட்டோ -0.03%

 

 11.00 மணி நிலவரம்


சென்செக்ஸ் 0.15%, நிஃப்டி 1.13 % உயர்வு!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 325.40 புள்ளிகள் அதிகரித்து 27829.59 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 95.60 புள்ளிகள் அதிகரித்து 8379.75 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 26,670 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 28 ரூபாய் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 3,385 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.32 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்திய சந்தைகளின் வளர்ச்சி தோராயமாக 1.14 சதவிகிதம் இருக்கிறது. அது மட்டுமின்றி இது இந்து வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஆசிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது.

இந்திய சந்தைகளில் ஆட்டொமொபைல், வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.
 
மும்பை பங்குச் சந்தையில் 2,306 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,633 பங்குகள் ஏற்றத்திலும், 604 பங்குகள் இறக்கத்திலும், 69 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 46 பங்குகள் ஏற்றத்திலும், நான்கு பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ் 3.61%
ஜிண்டால் ஸ்டீல் 3.26%
ஹெச் டி எஃப் சி 3.14%
ஐசிஐசிஐ பேங்க் 2.02%
டாடா மோட்டார்ஸ் 1.92%

இறக்கப் பங்குகள் :

பி பி சி எல் -0.66%
ஹீரோ மோட்டோகார்ப் -0.14%
பஜாஜ் ஆட்டோ -0.10%

என் எம் டி சி -0.27%

 

9.30 மணி நிலவரம்

புது வருடத்தில் இந்திய சந்தைகள் ஏற்றம்...!

2015ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் 0.76 சதவிகித வளர்ச்சியோடு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 212.81 புள்ளிகள் அதிகரித்து 27720.35 புள்ளிகளாக வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 62.75 புள்ளிகள் அதிகரித்து 8346.75 புள்ளிகளாக வர்த்தகமாகத்தொடங்கி இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை மூன்று ரூபாய் அதிகரித்து 26,700 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 31 ரூபாய் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 3,400 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.48 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் 879 பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அதில் 701 பங்குகள் ஏற்றத்திலும், 153 பங்குகள் இறக்கத்திலும், 25 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 47 பங்குகள் ஏற்றத்திலும், மூன்று பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஆசிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. இந்தியச் சந்தைகளில் வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
பி ஹெச் இ எல் 1.56%
ஓ என் ஜி சி 1.34%
ஜிண்டால் ஸ்டீல் 1.31%
ஹெச் டி எஃப் சி 1.22%
சிப்லா 1.21%

இறக்கப் பங்குகள் :
பி பி சி எல் -0.66%
என் எம் டி சி -0.27%
எம் அண்ட் எம் -0.21%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close