Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன....!


3.30 மணி நிலவரம்:
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 45.58 புள்ளிகள் குறைந்து 27842.32 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17.05 புள்ளிகள் குறைந்து 8404.90 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 134 ரூபாய் அதிகரித்து 26,864 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 78 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,313 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.30 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவு மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட்டை (3.48% ஏற்றம்) தவிர அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. உலக சந்தைகளில் அதிக பட்சமாக ஸ்ட்ரைட் டைம்ஸ் -1.27 % இறக்கத்தில் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் 3,066 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,517 பங்குகள் ஏற்றத்திலும், 1,427 பங்குகள் இறக்கத்திலும், 122 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
மாருதி சுஸீகி 2.63%
டாடா மோட்டார்ஸ் 2.40%
டாடா ஸ்டீல் 1.75%
லார்சன் 1.59%
ஐ டி எஃப் சி 1.42%

இறக்கப் பங்குகள் :
டி எல் எஃப் -2.23%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.11%
பார்தி ஏர்டெல் -1.88%
ஹிண்டால்கோ -1.50%
டெக் மஹிந்திரா -1.42%

2:00 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 40.78 புள்ளிகள் அதிகரித்து 27928.68 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 9.45 புள்ளிகள் அதிகரித்து 8404.90 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 155 ரூபாய் அதிகரித்து 26,885 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 83 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,308 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.31 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அற்றும் ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட்டை தவிர அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. .
 
மும்பை பங்குச் சந்தையில் 2,905 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,544 பங்குகள் ஏற்றத்திலும், 1,239 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 32 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
மாருதி சுசுகி 2.64%
ஜிண்டால் ஸ்டீல் 2.56%
டாடா மோட்டார்ஸ் 2.32%
ஓ என் ஜி சி 2.12%
லார்சன் 2.01%
 
இறக்கப் பங்குகள் :
 
டி எல் எஃப் -2.23%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.11%
பார்தி ஏர்டெல் -1.88%
ஹிண்டால்கோ -1.50%
ஹெச் சி எல் டெக் -1.42%
 
12.30 மணி நிலவரம்

இறங்கத் தொடங்கிய இந்தியச் சந்தை
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 43.59 புள்ளிகள் அதிகரித்து 27931.49 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10.90 புள்ளிகள் அதிகரித்து 8406.35 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 165 ரூபாய் அதிகரித்து 26,895 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 106 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,285 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.38 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
தற்போது ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஹெல்த் கேர், வங்கி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஐரோப்பிய சந்தைகள் ஜனவரி இரண்டாம் தேதி வர்த்தகம் இறக்கத்தில் முடிந்தது. அமெரிக்க அற்றும் ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட்டை தவிர அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் வளர்ச்சி விகிதம் கூட காலை 9.30 மணி நிலவரத்தை காட்டிலும் குறைந்திருக்கிறது.
 
மும்பை பங்குச் சந்தையில் 2,744 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,534 பங்குகள் ஏற்றத்திலும், 1,108 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும், இரண்டு பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
மாருதி சுஸீகி 2.68%
லார்சன் 1.97%
ஓ என் ஜி சி 1.96%
டாடா ஸ்டீல் 1.94%
ஜிண்டால் ஸ்டீல் 1.61%
 
இறக்கப் பங்குகள் :
 
டி எல் எஃப் -2.44%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.10%
பார்தி ஏர்டெல் -1.48%
ஹெச் சி எல் டெக் -1.23%

ஹெச் டி எஃப் சி -1.10%

 

 சென்செக்ஸ் மீண்டும் 28000! 

11.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 138.95 புள்ளிகள் அதிகரித்து 280074.64 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 30.15 புள்ளிகள் அதிகரித்து 8425.95 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.சென்செக்ஸ்மீண்டும் 28000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.

10 கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் அதிகரித்து 26,835 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இன்று சந்தையில் 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 2544 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை ஒன்பது ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,391 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 1.61 % குறைந்து 56.42 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 1.10% குறைந்து 52.69 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.36 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தையில் நிக்கி 0.26 சதவிகிதமும், ஹேங்சேங் 0.38 சதவிகிதமும், ஷாங்காய் காம்போஸைட் 2.96 சதவிகிதமும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக இருக்கிறது.

ஏற்றப் பங்குகள் :

மாருதி சுசுகி 2.78%
டாடா ஸ்டீல் 2.18%
ஜிண்டால் ஸ்டீல் 1.95%
லார்சன் 1.81%
டாடா மோட்டார் 1.66%

இறக்கப் பங்குகள் :

டி எல் எஃப் -2.80%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -1.53%
பார்தி ஏர்டெல் -1.27%
என் டி பி சி -0.80%
ஹெச் டி எஃப் சி -0.77%


 

9.30 மணி நிலவரம்

 

 


ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!


இன்று காலை சந்தை துவங்கியதும் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 85.08 புள்ளிகள் அதிகரித்து 27973.70 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 22.90 புள்ளிகள் அதிகரித்து 8,418.35 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் அதிகரித்து 26,730 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ஒன்பது ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,391 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.29 ரூபாயாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்திய சந்தைகளில் ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, மெட்டல், பொதுத் துறை நிறுவனம் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் 1,600 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,089 பங்குகள் ஏற்றத்திலும், 449 பங்குகள் இறக்கத்திலும், 62 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

 


ஜிண்டால் ஸ்டீல் 2.07
மாருதி சுஸீகி 1.57
லார்சன் 1.39
ஏசியன் பெயின்ட்ஸ் 1.17
டாடா பவர் 1.14

இறக்கப் பங்குகள் :

டி எல் எஃப் -1.80
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -0.84
பார்தி ஏர்டெல் -0.75
ஹெச் டி எஃப் சி -0.73
கெர்ய்ன் இந்தியா -0.56
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ