Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக வலைதளங்களில் சாதிக்கும் மேக் இன் இந்தியா!

 

பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்த மேக் இன் இந்தியா பிரசாரம், இன்று ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மேக் இன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தை (https://www.facebook.com/makeinindiaofficial) இன்று காலை வரை 30,31,473 பேர் லைக் செய்து, அதை பின் தொடர்ந்து வருகிறார்கள். 


மேலும் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் புதிய நபர்கள் இந்தப் பக்கத்தை லைக் செய்து கொண்டிருக்கிறார்களாம். இந்திய அரசின் மற்ற துறைகளின் சமூக வலைதள பக்கங்களுக்கு இல்லாத வரவேற்பு மேக் இன் இந்தியா பக்கத்திற்கு இருப்பதைப் பார்த்து அரசு தரப்பினரே வாயடைத்து போயிருக்கிறார்கள். 

ஃபேஸ்புக் பக்கத்தை போல Twitter @makeinindia (https://twitter.com/makeinindia) பக்கத்தை இன்று வரை 2.70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது மேக் இன் இந்தியா இணையதளத்திற்கும் மக்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகிறார்கள். இதுவரை 17 லட்சம் பேர் மேக் இன் இந்தியா இணையதளத்தை பார்வையிட்டிருக்கிறார்கள். 

சமூக வலைதளம் ஆரம்பித்து 90 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது மிகப் பெரிய சாதனைதான்!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close