Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடிஐகளுக்கு புதிய மதிப்பீடு முறை

 

தொழிற் பயிற்சி நிறுவனங்கள் சிறந்து விளங்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு புதிய மதிப்பபீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தர மதிப்பீடு மூலம் இந்தியாவில் உள்ள சிறந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களை மாணவர்களும் வேலை தரும் நிறுவனங்களும் கண்டெடுக்க உதவும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.
 
அதே போல் ஐடிஐகளின்  தரத்தை உறுதி செய்ய ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மறு மதீப்பிடு செய்ய என்.சி.வி.டி (நேஷனல் கவுன்சில் ஆன் வொக்கேஷனல் ட்ரெய்னிங்) முடிவு செய்திருக்கிறது.

தர மதிப்பீடு புள்ளிகள்
புள்ளிகள்                  மதிப்பீடு
8-10 புள்ளிகள்         5 ஸ்டார்
6-8  புள்ளிகள்           4 ஸ்டார்
5-6  புள்ளிகள்           3 ஸ்டார்

ஐந்து மற்றும் நான்கு ஸ்டார் மதிப்பீடு கொண்ட நிறுவனங்கள் அனுமதித்த கட்டனத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று தொழிளாலர் மற்றும் வேலைவாய்ப்பு தெரிவித்திருக்கிறது.

தற்போது இந்தியாவில் 12,000 க்கும் அதிகமான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போல் இன்னும் பல புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்களை தொடங்க விண்ணப்பப்பித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close