Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் ஆன்லைன் ஷாப்பிங் 67% அதிகரிக்கும்!

சமீபத்தில் Assocham-PwC  மேற்கொண்ட ஆய்வில், இன்றைய நிலையில் இந்தியர்கள் ஆண்டுக்கு சராசரியாக ஆன்லைன் மூலம் 6,000 ரூபாய் வரை ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இது 67% அதிகரித்து வரும் 2015-ம் ஆண்டு 10,000 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 40 மில்லியன் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி இருக்கிறார்கள் என்றும், தற்போதைய இணையதள வளர்ச்சி காரணத்தினால் இந்த எண்ணிக்கை 2015-ல் 6 5 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இன்றைய இ-காமர்ஸ் துறையின் தற்போதைய மதிப்பு 17 பில்லியன் டாலர் (1,08,167 கோடி ரூபாய்), இந்த மதிப்பானது இன்னும் ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும், இத்துறையில் தற்போது வேலை பார்த்து வருபவர்களின் எண்ணிக்கை 25,000-ஆக இருக்கிறது. இது 2017-20 காலகட்டத்தில் ஒரு லட்சத்தை தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP