Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஓபிக்கு புதிய நிர்வாக இயக்குநர்

சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலராக ஆர்.கோட்டீஸ்வரன் கடந்த மாதம் 31ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு பேங்க் ஆப் இந்தியாவில் செயல் இயக்குநராக பணிபுரிந்தவர்.
 
வங்கி துறையில் முதன்முதலாக 1976-ம் ஆண்டு பேங்க் ஆஃப் பரோடாவில் தன் பணியை துவங்கிய இவர் ஆகஸ்ட் 2013-ம் ஆண்டு வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வங்கி துறையில் தகவல் தொழில்நுட்பம், மனித வளம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணி புரிந்த அனுபவம் இவருக்கு உண்டு.
 
இதனை சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ