Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரவிந்த் பனகாரியா துணை சேர்மன்! நிதி ஆயோக் குழுவை அறிவித்தார் மோடி!

திட்ட குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இதற்கான குழுவை இன்று மத்திய அரசு அறிவித்தது. இது பத்து பேர் கொண்ட குழுவாக இயங்கும் என்று கூறியுள்ளது.

இதன் துணை தலைவராக (Vice-Chairman) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியாவை நியமித்துள்ளது.
 
62 வயதான இவர் ஏற்கெனவே உலக வங்கி, ஆசியன் மேம்பாட்டு வங்கி, ஐஎம்எஃப், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இதற்கான குழுவை இந்திய பிரதமர் மோடி நியமித்துள்ளார். இதில் துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியாவும்,  முழுநேர உறுப்பினர்களாக பிபேக் தேப்ராய், டாக்டர் வி.கே. சரஸ்வாட் ஆகியோரும், எக்ஸிக்யூட்டிவ் ஆபீஸியல்களாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி,ராதா மோகன் சிங் ஆகியோரும், சிறப்பு உறுப்பினர்களாக நிதின் கட்கரி, தவார் சந்த் ஜெ ஹோல்ட், ஸ்மிரிதி இராணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close