Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 854 புள்ளிகள் வீழ்ச்சி... ஏன்? எதனால்?!

இன்றைய சந்தையின் சரிவை பற்றி பங்குச் சந்தை நிபுணர் எஸ். லெட்சுமணராமனிடம் கேட்டோம். 
 
அவர், ''கிரீஸ் நாட்ட்டில் நிலவுகிற அரசியல் சூழ்நிலைகள் யூரோ நாணயத்தின்  மதிப்பை பாதிக்கும் என்கிற அச்ச நிலை, அது போல ஐரோப்பிய யூனியனின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சி 0.1 சதவிகிதம்தான் இருக்கும் என்ற கணிப்பு போன்றவை, கச்சா எண்ணெயின் விலை  50 டாலருக்கும் கீழே சரிந்து வருவது போன்றவை  உலக சந்தையில் அதிகபடியான நிலையற்ற தன்மையை பரப்புகிறது. இதனால் பொதுவாக பொருளாதார மந்த நிலையையும், அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி, இறக்குமதிகளில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று கூறினார் எஸ். லெட்சுமணராமன்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் அனைத்தும் வட்டி விகிதங்களை குறைக்கும் நிலையில் இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கவில்லை என்பதும்  சந்தையை பாதிக்கும்.
 
கடந்த ஆண்டில்(2014) அந்நிய நிகர முதலீட்டாளர்கள் ஈக்விட்டியில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டின் டிசம்பர் மாத மத்தியிலிருந்து அந்நிய நிகர முதலீட்டாளர்களின் முதலீடு குறையத் தொடங்கியிருக்கிறது. வரும் மாதங்களில் அந்நிய நிகர முதலீடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதிக மாற்றங்களை இந்திய சந்தைகள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
 
தற்போது உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய சந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறது. நிலையான அரசு, பணவீக்கம், நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவைகள் இந்தியாவிற்கு சாதகமாக இருக்கிறது. அதே போல் அரசும் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க அதிக முயற்சி எடுத்துவருகிறது. பட்ஜட் பற்றாக்குறை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு போன்றவைகள் இந்தியாவிற்கு பாதகமாக இருக்கிறது.

பொதுவாக இன்னும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதிக ஏற்ற இறக்கங்களுடனேயே இந்திய சந்தைகள் இருக்கும் என்றும் கூறினார். இனி வரும் நாட்களில் தினசரி  வர்த்தகம் (இன்ட்ரா டே டிரேடிங்)  அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்றும் கூறினார் எஸ். லெட்சுமணராமன்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ