Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிவடைந்த இந்திய சந்தைகள்!

இறக்கத்தில் முடிவடைந்த இந்திய சந்தைகள்!

 

3.30 மணி நிலவரம்!



மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 78.64 புள்ளிகள் குறைந்து 26908.82 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 25.25 புள்ளிகள் குறைந்து 8102.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது.

10 கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 27,314 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 37 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,032 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.34 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்திய சந்தையில் வங்கி, எஃப்.எம்.சி.ஜி, ஹெல்த் கேர், ஐ.டி, மெட்டல், டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. எண்ணெய் மற்றும் காஸ், மிட் கேப், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் 2,929 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 1,299 பங்குகள் ஏற்றத்திலும், 1,530 பங்குகள் இறக்கத்திலும், 100 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை ஏற்றத்திலும், சில சந்தைகள் தேக்க நிலையிலும் வர்த்தகமாயின. இந்திய சந்தை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் யூ எல் 3.51%
என் டி பி சி 2.41%
ரிலையன்ஸ் 2.18%
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.01%
கோட்டக் மஹிந்திரா 1.61%

இறக்கப் பங்குகள் :

ஹிண்டால்கோ -2.93%
என் எம் டி சி -2.93%
பி ஹெச் இ எல் -2.72%
ஐசிஐசிஐ பேங்க் -2.70%
கெயில் -2.55%

 

சரிவில்  இந்தியச் சந்தைகள்! 12:30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 65.83 புள்ளிகள் குறைந்து 26921.63புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 21.75 புள்ளிகள் குறைந்து 8105.60புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் மொத்த இறக்க சதவிகிதம் 0.25% ஆக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 108 ரூபாய் அதிகரித்து 27,286 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 57 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,012 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.43 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இன்றும் சென்செக்ஸின் செக்டோரியல் இண்டெக்ஸ் இறக்கத்திலேயே இருக்கின்றன. அதிகபட்சமாக வங்கி, ஹெல்த் கேர், மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. எண்ணெய் மற்றும் காஸ் செக்டோரியல் இண்டெக்ஸ் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் 2,635 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 930 பங்குகள் ஏற்றத்திலும், 1,613 பங்குகள் இறக்கத்திலும், 92 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 32 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் யூ எல் 3.14%
கோட்டக் மஹிந்திரா 2.21%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.86%
என் டி பி சி 1.76%
ரிலையன்ஸ் 1.66%

இறக்கப் பங்குகள் :

கெயில் -3.00%
பி ஹெச் இ எல் -2.95%
பி என் பி -2.77%
என் எம் டி சி -2.66%
ஐசிஐசிஐ பேங்க் -2.55%
 
11.00 மணி நிலவரம்
 

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 2.63 புள்ளிகள் அதிகரித்து 26999.09 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5.85 புள்ளிகள் அதிகரித்து 8211.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 129 ரூபாய் அதிகரித்து 27,265 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2589 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2769 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை 29 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,040 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 3.93 % மேலும் சரிந்து 51.10 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ. டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 4.40% சரிந்து 47.93 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.41 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக அளவில் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்றைய வர்த்தக முடிவில் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தன. அமெரிக்க சந்தைகள் தற்போது இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றது. ஆசிய சந்தைகளில் அதிக பட்சமாக ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.71% ஏற்றத்தில் வர்த்தகமகின்றது.

மும்பை பங்குச் சந்தையில் 2,256 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,245 பங்குகள் ஏற்றத்திலும், 926 பங்குகள் இறக்கத்திலும், 85 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் யூ எல் 3.30%
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.45%
கோட்டக் மஹிந்திரா 2.38%
என் டி பி சி 2.08%
ரிலையன்ஸ் 1.47%

இறக்கப் பங்குகள் :

கெயில் -2.58%
கெர்ய்ன் இந்தியா -2.18%
பி ஹெச் இ எல் -1.90%
ஐசிஐசிஐ பேங்க் -1.87%
டாடா மோட்டார்ஸ் -1.35%

9:30 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்தன. இதனை தொடர்ந்து இன்று சந்தைகள் ஆரம்பம் முதல் சற்று ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 14 புள்ளிகள் அதிகரித்து 27002 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து 8133 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 27,394 ரூபாயாகவும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 146 ரூபாய் சரிந்து 3,069 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.53 ரூபாயாக உள்ளது.
 
கிரீஸ் நாட்ட்டில் நிலவுகிற அரசியல் சூழ்நிலைகள் யூரோ நாணயத்தின்  மதிப்பை பாதிக்கும் என்கிற அச்ச நிலை, அது போல ஐரோப்பிய யூனியனின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சி 0.1 சதவிகிதம்தான் இருக்கும் என்ற கணிப்பு போன்றவை, கச்சா எண்ணெயின் விலை  50 டாலருக்கும் கீழே சரிந்து வருவது போன்றவை  உலக சந்தையில் அதிகபடியான நிலையற்ற தன்மையை பரப்புகிறது.இதனால் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.
 
இந்திய சந்தைகளில் சென்செக்ஸில் 808 பங்குகள் விலை அதிகரித்தும் 403 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தக்மாகின்றன.நிஃப்டியில் 355 பங்குகள் விலை அதிகரித்தும், 217 பங்கள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
ஏற்ற பங்குகள்:
 
 
ஹச்யூஎல் 2.72
கோட்டக் மஹிந்த்ரா 2.66
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.00
ரிலையன்ஸ் 1.33
டெக் மஹிந்த்ரா 1.23
 
இறக்க பங்குகள்:
 
கெய்ர்ன் இந்தியா -2.16
ஐசிஐசிஐ வங்கி -1.80
பிஹச்இஎல் -1.72
கெயில் -1.40
டாடா மோட்டார்ஸ் -1.39
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ