Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!
 

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 365.89 அதிகரித்து 27274.71 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 132.50 புள்ளிகள் அதிகரித்து 8234.60 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது.

10 கிராம் தங்கத்தின் விலை 334 ரூபாய் குறைந்து 26,820 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 15 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,062 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாய்க்கு வர்த்தகமாகியது.

மும்பை பங்குச் சந்தையில் 2,940 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 2,024 பங்குகள் ஏற்றத்திலும், 819 பங்குகள் இறக்கத்திலும், 97 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 48 பங்குகள் ஏற்றத்திலும், இரண்டு பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உலக சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கியதிலிருந்து தொடர் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஷாங்காய் காம்போஸைட் தற்போது வரை இறக்கத்திலேயே வர்த்தகமாகிறது.

கடந்த இரண்டு நாட்களில் இறக்கத்தை சந்தித்த சந்தைகள் இன்று அந்த இறக்கங்களை சரிகட்டும் விதத்தில் ஏற்றம் கண்டு வர்த்தகமாயின. இந்திய சந்தைகளுக்கு சென்செக்ஸ் 28500, நிஃப்டிக்கு 8500 என்கிற புள்ளிகள் எட்டாத உயரங்களாகவே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்றப் பங்குகள் :


ஏசியன் பெயிண்ட்ஸ் 6.30%
டி எல் எஃப் 5.68%
கோட்டக் மஹிந்திரா 5.62%
ஜிண்டால் ஸ்டீல் 5.09%
பி பி சி எல் 5.06%

இறக்கப் பங்குகள் :

ரிலையன்ஸ் -1.32
ஜி என்டர்டெயின்மென்ட்-0.10
 
இறக்கத்தில் இந்திய சந்தைகள்!
2.00 மணி நிலவரம்!
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 343.52 புள்ளிகள் குறைந்து 27252.34 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 115.45புள்ளிகள் குறைந்து 8217.55புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தற்போது சந்தை நிலவரப்படி இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.35% ஆக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 276 ரூபாய் குறைந்து 26,885 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை நான்கு ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,073 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.84 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
உலக சந்தையில் தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.ஆசியாவிலும் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஷாங்காய் காம்போஸைட் மட்டும் 2.42% சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
 
சென்செக்ஸில் உள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக வங்கி, ஆட்டோமொபைல், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
டி எல் எஃப் 6.17%
ஏசியன் பெயிண்ட்ஸ் 4.95%
கெர்ய்ன் இந்தியா 4.56%
பி பி சி எல் 4.54%
டாடா மோட்டார்ஸ் 3.50%
 
இறக்கப் பங்குகள் :
ரிலையன்ஸ் -0.64%
ஹீரோ மோட்டோகார்ப்-0.44%
இன்ஃபோசிஸ் -0.18%
ஜி என்டர்டெயின்மென்ட்-0.08%
 
 

12.30 மணி நிலவரம்
ஏற்றத்தில் இந்திய சந்தைகள்....!


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 290.82புள்ளிகள் அதிகரித்து 27199.64 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 97.70 புள்ளிகள் அதிகரித்து 8200.55புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் மொத்த ஏற்ற சதவிகிதம் 1.15% ஆக இருக்கிறது.


10 கிராம் தங்கத்தின் விலை 196 ரூபாய் குறைந்து 26,965 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 18 ரூபாய் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 3,095 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.02 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 


மும்பை பங்குச் சந்தையில் 2,655 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,920 பங்குகள் ஏற்றத்திலும், 650 பங்குகள் இறக்கத்திலும், 85 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 44 பங்குகள் ஏற்றத்திலும், 6 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
பி பி சி எல் 4.63%
கெர்ய்ன் இந்தியா 4.02%
ஏசியன் பெயிண்ட்ஸ் 3.25%
டி எல் எஃப் 3.16%
ஜிண்டால் ஸ்டீல் 2.93%

இறக்கப் பங்குகள் :
ரிலையன்ஸ் -1.05%
பவர்கிரிட் கார்ப் -0.76%
சேசா ஸ்டெர்லைட் -0.38%
ஜீ என்டர்டெயின்மென்ட்-0.21%
ஹீரோ மோட்டோகார்ப்-0.07%



 

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!

 

 

11:00 மணி நிலவரம்!

 


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 267.48 புள்ளிகள் அதிகரித்து 27176.30 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 88.45 புள்ளிகள் அதிகரித்து 8105.60புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் மொத்த ஏற்ற சதவிகிதம் 1.04% ஆக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 168 ரூபாய் குறைந்து 26,993 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 27 ரூபாய் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 3,014 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.12 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அதில் அதிகபட்சமாக வங்கி, ஸ்மால் கேப், மிட் கேப், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் அதிகபட்சமாக நிக்கி 1.97%, தைய்வான் சந்தை 1.66% ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஷாங்காய் காம்போஸைட் மட்டும் 1.85% இறக்கத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் 2,220 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,763 பங்குகள் ஏற்றத்திலும், 413 பங்குகள் இறக்கத்திலும், 44 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 47 பங்குகள் ஏற்றத்திலும், 3 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 



ஏற்றப் பங்குகள் :

 

 


பி பி சி எல் 4.73%
ஏசியன் பெயிண்ட்ஸ் 3.18%
கோட்டக் மஹிந்திரா 2.65%
டாடா மோட்டார்ஸ் 2.61%
கெர்ய்ன் இந்தியா 2.48%

இறக்கப் பங்குகள் :

 


ரிலையன்ஸ் -1.06
சேசா ஸ்டெர்லைட் -1.03
ஜீ என்டர்டெயின்மென்ட்-0.26
பவர்கிரிட் கார்ப் -0.15

 

பஜாஜ் ஆட்டோ -0.08

 

 

 9:30 மணி நிலவரம்:

 
கடந்த இரண்டு நாட்களாக இறக்கத்தில் வர்த்தகமாகி முடிந்த சந்தைகள் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 27221 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 90 புள்ளிகள் அதிகரித்து 8192 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 233 ரூபாய் குறைந்து 27,161 ரூபாயாகவும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 8 ரூபாய் அதிகரித்து 3,077 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.08 ரூபாயாக உள்ளது.
 
கச்சா எண்ணெயின் விலை இறக்கம் நான்கு நாட்கள் இருந்த அளவுக்கு அல்லாமல் தற்போது சற்று நிலைபெற்றுள்ளதும். கிரீக் நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றமும் சர்வதேச சந்தைகளில் முன்னேற்றத்தை தந்துள்ளன. ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
 
இந்திய சந்தைகளில் சென்செக்ஸில் 491 பங்குகள் விலை அதிகரித்தும் 65 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்ற பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.48
கோல் இந்தியா 2.24
ஜின்டால் ஸ்டீல் 2.23
கெய்ர்ன் இந்தியா 2.13
டாடா மோட்டார்ஸ் 1.88
 
இறக்க பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் -0.79
ரிலையன்ஸ் -0.52
ஓஎன்ஜிசி -0.38
ஜி என்டெர்டெயிண்மென்ட் -0.36

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ