Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2030-ல் நாட்டின் பென்ஷன் செலவு அதிகரிக்கும்!

தற்போது 10 கோடியாக இருக்கும் இந்திய மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050-ல் 18 கோடியாக அதிகரிக்கும் என்றும், இதனால் அவர்களுக்கு வழங்கும் பென்ஷன் அளவு கூடும் என்றும் கிரிஸில் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இன்றைய இந்திய அரசானது இந்திய மூத்த குடிமக்களுக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% செலவு செய்கிறது. இந்த செலவு விகிதமானது 2030-ல் 3.4 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும், இதனால் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.1 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கிரிஸில் அமைப்பு தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ