Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்

3.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள். அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இன்ட்ரா டேடிரேடிங்...!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 183.67 புள்ளிகள் அதிகரித்து 27458.38 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 49.90 புள்ளிகள் குறைந்து 8284.50 புள்ளிகளாக வர்த்தகமாயின. 

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 59 ரூபாய் குறைந்து 26,742 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு நான்கு ரூபாய் குறைந்து 3,051 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.39 ரூபாயாக வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,991 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,1323 பங்குகள் ஏற்றத்திலும், 1,543 பங்குகள் இறக்கத்திலும், 125 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்றைய வர்த்தக முடிவில் இந்திய சந்தைகளில் ஹெல்த் கேர், ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ். டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, மூலதன பொருட்கள், மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகள் தேக்க நிலையிலும், இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஆசிய அளவில் அதிகபட்சமாக கோஸ்பி 1.04% ஏற்றத்திலும், தைய்வான் வெயிடெட் 0.24% இறக்கத்திலும் வர்த்தகமாயின.


ஏற்றப் பங்குகள்:
ஹெச் யூ எல் 5.82%
இன்ஃப்போசிஸ் 5.12%
டெக் மஹிந்திரா 4.43%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 3.18%
டி சி எஸ் 2.80%

இறக்கப் பங்குகள்:
டிஎல்எஃப் -3.43%
என்டிபிசி -3.24%
ஜிண்டால் ஸ்டீல் -3.20%
பஜாஜ் ஆட்டோ -3.04%

ஐ டி எஃப் சி -1.66%

 

2.00 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 76.36 புள்ளிகள் குறைந்து 27198.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 24.30 புள்ளிகள் குறைந்து 8210.30 புள்ளிகளாக வர்த்தகமாகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 31 ரூபாய் குறைந்து 26,770 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3,068 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.36 ரூபாயாக வர்த்தகமாகிறது.


தற்போது இந்திய சந்தைகளில் ஹெல்த் கேர், ஐ.டி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, மூலதன பொருட்கள், பொதுத்துறை நிறுவனம் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமானலும், சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலேயே தொடங்கி இருக்கிறது. ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ், தைய்வான் வெயிட்டெட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.29 ஆக இருக்கிறது.

ஏற்றப் பங்குகள்:

இன்ஃபோசிஸ் 4.38%
ஹெச் யூ எல் 3.88%
டெக் மஹிந்திரா 3.33%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 2.33%
சிப்லா 2.22%

இறக்கப் பங்குகள்:

டிஎல்எஃப் -4.17%
என்டிபிசி -3.62%
பஜாஜ் ஆட்டோ -3.17%
ஜிண்டால் ஸ்டீல் -2.56%
ஐசிஐசிஐ பேங்க் -2.22%

 

 

இறக்கத்தில் இந்திய சந்தைகள்! 12:30 மணி நிலவரம்!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 54.59 புள்ளிகள் குறைந்து 27220.12 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17.50 புள்ளிகள் குறைந்து 8217.10 புள்ளிகளாக வர்த்தகமாகின்றன. 

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ஏழு ரூபாய் குறைந்து 26,808 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 25 ரூபாய் அதிகரித்து 3,080 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.41 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் மற்றும் பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் தைய்வான், இந்தியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் இறக்கத்திலும், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி சந்தை தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,701 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,131 பங்குகள் ஏற்றத்திலும், 1,466 பங்குகள் இறக்கத்திலும், 104 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்:
ஹெச் யூ எல் 3.91%
சிப்லா 2.34%
டெக் மஹிந்திரா 1.77%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.75%
டாடா மோட்டார்ஸ் 1.72%

விலை குறைந்த பங்குகள்:
ஜிண்டால் ஸ்டீல் -3.23%
பஜாஜ் ஆட்டோ -3.12%
டிஎல்எஃப் -2.91%
என்டிபிசி -2.76%
ஆக்ஸிஸ் பேங்க் -2.18%



தொடர் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!  11:00 மணி நிலவரம்!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 187.18 புள்ளிகள் அதிகரித்து 27461.89 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53.05 புள்ளிகள் அதிகரித்து 8287.65 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 

இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 55 ரூபாய் குறைந்து 26,746 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2547 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2724 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 20 ரூபாய் அதிகரித்து 3,075 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 0.37 % குறைந்து 50.96 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 0.29% அதிகரித்து 48.79 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்:

சிப்லா 3.12%
ஹெச் யூ எல் 2.88%
டெக் மஹிந்திரா 2.69%
டாடா மோட்டார்ஸ் 2.40%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.21%

விலை குறைந்த பங்குகள்:

டிஎல்எஃப் -2.03%
என்டிபிசி -1.62%
ஏசியன் பெயிண்ட்ஸ் -1.38%
ஜி என்டர்டெயின்மென்ட் -1.08%
ஜிண்டால் ஸ்டீல் -1.01%



காலை 9:45 மணி நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி வர்த்தகமாகின.  மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 175 புள்ளிகள் அதிகரித்து 27450 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 8287 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 360 ரூபாய்ய் குறைந்து 26,801 ரூபாய்க்கும், கச்சா எண்னெயின் விலை பேரலுக்கு 22 ரூபாய் குறைந்து 3,055 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.40 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு மதிப்பு கூடி வர்த்த்கமாவதும், ஐரோப்பிய மத்திய வங்கி விரைவில் குவான்டேட்டிவ் ஈசிங் முறைக்கு மாறும் என்ற எதிர்பார்ப்பும் சந்தைகளின்  ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளன. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
சிப்லா 3.32
டாடா ஸ்டீல் 2.37
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.21
டெக் மஹிந்தரா 2.16
ஹச்யூஎல் 2.12
 
விலை குறைந்த பங்குகள்:
 
என்டிபிசி -1.62
டிஎல்எஃப் -0.88
பாரதி ஏர்டெல் -0.80
ஏசியன் பெயிண்ட்ஸ் -0.76
ஐசிஐசிஐ வங்கி -0.43

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ