Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ் 3-வது காலாண்டு முடிவு வெளியீடு!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனம் இன்று தனது மூன்றாவது காலாண்டு நிதி நிலை முடிவை வெளியிட்டிருக்கிறது. 


பொதுவாக இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவைப் பொருத்துதான் பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்பார்கள். இன்று இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் நிகர லாபம்  5% அதிகரித்திருக்கிறது. அனலிட்கள் இதன் நிகரலாபம் 1.9 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கணித்திருந்தார்கள். 

இரண்டாவது காலாண்டில் இதன் லாபம் 3,096 கோடி ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் காலாண்டு முடிவில் 3,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் நிறுவனத்தின் வருவாய் 3.4% அதிகரித்து 13,769 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 13,342 கோடியாக இருந்தது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close