Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்நாட்டு விமான கட்டணம்: 50 % குறைத்தது ஏர் இந்தியா!

 உள்நாட்டு விமான கட்டணம்:  50 % குறைத்தது ஏர் இந்தியா!

 
இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம் த்அனது பயணிகளுக்கு 50 சதவிகித கட்டணத்தை குறைத்து வழங்க முடிவு செய்துள்ளது.
 
இதன் மூலம் அதிக பயணிகளை கவர முடியும் என்பதாலும், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை தரமுயர்த்தவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்த புதிய திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான சேவையை குறைந்த கால ஆஃபராக துவங்கி 1557 ரூபாய் முதல் சேவையை வழங்க உள்ளது ஏர் இந்தியா.
 
இதற்கான டிக்கெட் விற்பனையை நேற்று துவங்கிய ஏர் இந்தியா ஜனவரி 18ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த தேதிகளில் ஜனவரி 16 முதல் ஏப்ரல் 30க்கு இடைப்பட்ட காலத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் நிகரலாபம் 14.6 கோடி என குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close