Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 19

  கமாடிட்டி வியாபாரம் 19


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 இந்த கேப்டவுனை இன்னும் எவ்வாறு செம்மையாக கையாளலாம் என்று சென்ற வாரம் ஒரு பகுதியை பார்த்தோம்.

அதற்க்கு எடுத்துக்காட்டாக தங்கத்தை பார்த்தோம். இந்த கேப்டவுன் நடக்கும்போது, பெரும்பாலும் ஏறி முடிகிறது என்றும் பார்த்தோம். அவ்வாறு ஏறி முடிந்ததற்க்கு எடுத்துக்காட்டாகத்தான் தங்கத்தை பார்த்தோம். இதுபோன்ற நிகழ்வு மற்ற கமாடிட்டிகளிலும் நடக்கிறதா என்பதையும் இன்னும் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம்.

குரூட்ஆயில்:

குரூட் ஆயில் 07.11.14. முந்தையநாள் முடிவுவிலை 4814, அடுத்தநாள் கேப்டவுன் ஆரம்பவிலை 4791.

மேலே உள்ள குரூட்ஆயில் வரைபடத்தில் 07.11.14 அன்று முதல் ஒரு மணிநேரத்தின் உச்சமான 4791ஐ தாண்டி ஏறி முந்தைய நாள் முடிவுவிலையான 4824ஐ அடைந்தது. அதன் பின், முந்தையநாள் முடிவு விலையையும்தாண்டி ஏறி 4868 என்ற புள்ளிகளை தொட்டு பெரும் லாபத்தை கொடுத்தது.

நிக்கல்:

நிக்கல் 30.10.14. அன்று, ஒரு கேப்டவுனுடன் துவங்கி உள்ளது. முந்தையநாள் முடிவு விலை 958.70. அடுத்தநாள் கேப்டவுனில் துவங்கிய விலை 951. பின்பு நாள் முழுவதும் பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது. பின்பு இரவு 9 மணி அளவில், முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தாண்டி ஏறியது. பின்பு முந்தையநாள் முடிவுவிலையான 958.70ஐ தொட்டது. மீண்டும் அந்த எல்லையை தாண்டி தொடரந்து ஏறி அன்றே 967 என்ற உச்சத்தையும், அடுத்த நாள் 986 என்ற புதிய உச்சத்தையும் தொட்டு பெரும் லாபத்தை கொடுத்தது.

 

லெட்:

லெட் 06.11.14 அன்று ஒரு கேப்டவுனுடன் துவங்கியது. பின்பு முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தாண்டி மிக வலிமையாக மேல் நோக்கி ஏறி உள்ளது.

ஸிங்க்:

ஸிங்க் 30.1.14. அன்று ஒரு கேப் டவுனுடன் துவங்கியது. இந்த கேப் டவுன் ஓப்பன் ஆன பிறகு, இரண்டு மணிநேரம் கழித்து முதல் ஒரு மணி நேரத்தின் உச்சத்தை உடைத்து மேலே ஏறியது, இருந்தாலும். அடுத்த நான்கு மணிநேரம் மெல்ல மெல்ல இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் அந்த நாளின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை என்பதால் ஏற்றம் தொடர்வதாகவே வைத்துக்கொள்ளலாம். இந்த வழிமுறையை வைத்து வியாபாரம் செய்ய நினைப்பவர்கள், நாளின் லோவை நட்டத்தடையாக வைத்து செயல்படலாம்.

இதுவரை நாம் கேப்டவுனின் ஒரு வகையை விரிவாக பார்த்தோம். அதற்கான எடுத்துக்காட்டுகளையும் மிக விரிவாக பார்த்தோம். இனி கேப்டவுனின் அடுத்த வகையை பற்றி பார்க்கலாம்.

கேப்டவுனின் இரண்டாம் வகை:

முந்தைய நாளின் முடிவுவிலையைவிட குறைந்து துவங்கி, அதன் பின் ஒரு மணிநேரத்திற்க்கு பிறகு, உச்சத்தை தாண்டி வியாபாரம் ஆகும் முறை பற்றி இதுவரை பார்த்தோம் அல்லவா!.

இதில், அடுத்த வகை, கேப் டவுனில் துவங்கிய பிறகு, அடுத்த ஒரு மணிநேரத்தின் கேன்டில் உடைய லோவை உடைத்து இறங்கி, தொடர்ந்து அதே திசையில் பயணிக்கும் வகை ஆகும்.

இந்த வகையில், கேப் டவுன் என்றாலே வலிமை குன்றுதல் என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த வலிமை குன்றுதல் என்பது, முதல் ஒரு மணிநேரத்தின் கேன்டில் உடைய லோவை உடைக்கும்போது, பெரும்பாலோர், இனி விலை தொடரந்து இறங்க வாய்ப்புள்ளது என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். எனவே அவர்கள் விற்பவர்களாக மாறுகிறார்கள். இப்படி சந்தையில் பெரும்பான்மையானவர்கள் விற்பவர்களாக மாறுவதால், விலை தொடரந்து இறங்க ஆரம்பிக்கிறது. அன்று முழுவதும் விலையானது இறங்கியே பயணித்து இறங்கியே முடிகிறது. இதை விளக்கப்படத்துடன் பார்க்கலாம்.

முந்தையநாள் முடிவுநிலை  

 

இன்றைய ஆரம்பவிலை

 

 

 

இந்த விளக்கப்படத்தில் விலை நேற்றைய விலையைவிட இறங்கி துவங்கி உள்ளது. அதன் பின், விலையானது தொடர்ந்து இறங்குகிறது.

நேற்றைய விலை

 

இன்றைய ஆரம்பவிலை

 

முதல் ஒருமணிநேர கேன்டில்

இந்த விளக்கப்படத்தில், விலையானது, இறங்க ஆரம்பித்துள்ளது. நாம் முதல் ஒரு மணிநேரம் எந்த வியாபாரமும் செய்யாமல், பொருமையாக காத்திருக்கிறோம். ஒரு மணிநேரம் முடிந்த பிறகு, ஒரு மணி நேர கேன்டிலின் உச்சத்தை தடைநிலையாகவும், ஒரு மணிநேர கேன்டிலின் லோவை ஆதரவுநிலையாகவும் எடுக்கலாம் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

இப்போது நடப்பது என்ன?

முந்தைய எடுத்துக்காட்டில், கேப் டவுன் ஆனபிறகு, மேல்நோக்கி செல்லும் வாய்ப்பு அதிகம் என்று பார்த்தோம். ஆனால், இந்த முறை, கேப் டவுன் ஆன பிறகு, ஒரு மணிநேரம் கழித்து, விலையானது, தொடர்ந்து கீழ்நோக்கி இறங்க ஆரம்பிக்கிறது. இந்த இறக்கமானது, தொடரந்து இறங்கி வலிமையான இறக்கமாக மாறுகிறது. விலையானது, அந்த நாள் முழுவதும் இறங்கி, முடிவுவிலையும் கணிசமாக இறங்கி முடிகிறது.

நேற்றைய முடிவுவிலை

 

இன்றைய ஆரம்பவிலை

முதல்ஒருமணிநேர கேன்டில்

 

 

இந்த கேப்டவுன் எடுத்துக்காட்டில் , இறங்கி துவங்கிய விலை, தொடரந்து இறங்கி, நாள் முழுவதும் இறங்கி, முடியும்போது, அந்த நாளின், குறைந்தபட்ச்ச விலையில் முடிகிறது.

இதுதான் இரண்டாவது வகையான, கேப்டவுன ஆகும்.

இந்த கேப் டவுன் வகைக்கு, சில எடுத்துக்காட்டை பார்ப்போம்.

கோல்ட்:

 

மேலே உள்ள வரைபடத்தில், தங்கம் 29.10.14.ல் ரூ.27072, என்ற விலையில் முடிந்துள்ளது. அடுத்து நாள், 30.10.14. அன்று, ரூ.26990/- என்ற விலையில் துவங்கி உள்ளது. இது ஒரு கேப் டவுன் ஓபன் ஆகும். பின் ஒரு மணிநேரம் கேன்டிலின் லோவை எடுத்தால், ரூ26852/- ஆகும். அதன் பின் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கடைசியாக ரூ.26625/- என்ற விலையில் முடிந்துள்ளது. இது தங்கம் கேப் டவுன் ஆனதிற்கான எடுத்துக்காட்டு.

சில்வர்:

மேலே உள்ள சில்வர் வரைபடத்தில், 29.10.14 அன்று, ஒரு கிலோ தங்கம் ரூ.38252/-ல் முடிவற்றுள்ளது. அடுத்த நாள் 30.10.14 அன்று ரூ.38125/- என்ற விலையில் இறங்கி துவங்கி உள்ளது. இறங்கி துவங்கிய வெள்ளி, அடுத்த ஒரு மணிநேரத்தில் தொடரந்து இறங்கி ஒரு கரடிக்கான கேன்டிலை தோற்றுவிக்கிறது. அடுத்தடுத்து வருகின்ற கேன்டில்கள் தொடர்ந்து விலை இறங்குவதை காட்டுகிறது. கடைசியில் நாள் முடியும்போது, ரூ.36550/- என்ற விலையில் முடிந்துள்ளது.

இதுவரை நாம் கேப் டவுன் ஓபனிங்கில் இரண்டு வகையை பார்த்தோம். மேலும், இரண்டாவது வகையான இறங்கி துவங்கி, தொடர்ந்து இறங்கி, பின் இறங்கியே முடிவதை பார்த்தோம். அதற்க்கு சில எடுத்துக்காட்டுகளையும் பார்த்தோம்.

அடுத்த வாரம் கேப் அப் என்றால் என்ன?

கேப் அப்பை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ