Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்.....நாளை ஏற்றம் காணுமா......

3.30 மணி நிலவரம்
 

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ  78.91 புள்ளிகள் குறைந்து 27346.82 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. நிஃப்டி 21.85 புள்ளிகள் குறைந்து 8277.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின.

10 கிராம் தங்கத்தின் விலை 101 ரூபாய் குறைந்து 26,954 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்து 2,850 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.13 ரூபாயாக வர்த்தகமாகிறது.  

அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆசியாவில் அதிகபட்சமாக நிக்கி 1.74 சதவிகிதம் இறக்கத்துடன் வர்த்தகமானது.

இன்றைய சந்தை முடிவில் ஐ.டி, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, மெட்டல், ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
 
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,980 பங்குகள் வர்த்தகமாயின, அதில் 1,259 பங்குகள் ஏற்றத்திலும், 1,599 பங்குகள் இறக்கத்திலும், 122 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள் :

ஹெச் யூ எல்                3.06%
பி ஹெச் இ எல்        2.33%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்      2.64%
ஏ சி சி                        2.31%
இன்ஃபோசிஸ்                1.90%

இறக்கப் பங்குகள் :

சேசா ஸ்டெர்லைட் -5.74%
ஹிண்டால்கோ -6.06%
டாடா ஸ்டீல்        -2.61%
ஐ டி சி                -3.17%
பி பி சி எல்          -2.44% 
 
 
 
 
2.00 மணி நிலவரம்
 
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ்  36.40 புள்ளிகள் குறைந்து 27388.93 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. நிஃப்டி 8.40 புள்ளிகள் குறைந்து 8291.00 புள்ளிகளுக்கு வர்த்தகமாக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் குறைந்து 26,950ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் குறைந்து 2,817 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.15 ரூபாயாக வர்த்தகமாகிறது.  
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் தொடர் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. ஆசிய சந்தைகளில் அனைத்து சந்தைகளும் இறக்க்கத்தில் வர்த்தமாகின்றன். நிக்கி 1.74 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் தொடர் சரிவு, சர்வதேச மந்த நிலை போன்றவைகள் இந்த பங்குச் சந்தை இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
 
தற்போது இந்திய சந்தையில் எந்த துறையும் நிலையாக வர்த்தகமாக வில்லை. தற்போதைய நிலவரப்ப்படி ஆட்டோமொபைல், ஐ.டி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, ஹெல்த் கேர், மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
ஹெச் யூ எல்          3.06%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்   2.64%
பி ஹெச் இ எல்  2.33%
ஏ சி சி          2.31%
பஜாஜ் ஆட்டோ          1.30%
 
இறக்கப் பங்குகள் :
 
ஹிண்டால்கோ -6.06%
சேசா ஸ்டெர்லைட் -5.74%
ஐ டி சி         -3.17%
டாடா ஸ்டீல்                 -2.61%
 
 
 
12.30 மணி நிலவரம்

இந்திய சந்தைகள் இறக்கம்.....சென்செக்ஸ் 205 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 59 புள்ளிகள் குறைவு.

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 205.69 புள்ளிகள் குறைந்து  27220.04 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 59.20 புள்ளிகள்  குறைந்து 8240.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 75  ரூபாய் குறைந்து 26,980 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 10  ரூபாய் குறைந்து 2,816 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.18 ரூபாயாக வர்த்தகமாகிறது.  

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் எஸ்.இ.டி காம்போஸைட் மட்டும் 0.59% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. ஆசியாவில் அதிகட்சமாக நிக்கி225 1.74% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.

தற்போது இந்திய சந்தையில்  ஐ.டி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, ஹெல்த் கேர், மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இப்போது இந்திய சந்தைகளின் இறக்க சதவிகிதம் 0.75 சதவிகிதமாக இருக்கிறது.

ஏற்றப் பங்குகள் :
 
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 2.40%
பி ஹெச் இ எல்         2.38%
ஏ சி சி                 2.35%
ஹெச் யூ எல்        2.27%
பஜாஜ் ஆட்டோ                1.30%

இறக்கப் பங்குகள் :
 
சேசா ஸ்டெர்லைட் -5.70%
ஹிண்டால்கோ -3.71%
ஐ டி சி            -3.11%
டாடா ஸ்டீல் -2.84%
 
 
 
11.00 மணி நிலவரம்

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு! நான்கு வார உச்சத்தில் ரூபாய்!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 15.43 புள்ளிகள் அதிகரித்து 27441.16 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 7.30 புள்ளிகள் அதிகரித்து 8306.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் குறைந்து 26,965 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,582 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்ருக்கு 2,762 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஆறு ரூபாய் குறைந்து 2,820 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 0.84 சென்ட் குறைந்து 46.59 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 0.18 டாலர் குறைந்து 45.89 டாலருக்கு வர்த்தகமாகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.12 ரூபாயாக வர்த்தகமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் இது தான் அமெரிக்க டாலரின் குறைந்த பட்ச மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மும்பை பங்குச் சந்தைகளில் மொத்தம் 2,289 பங்குகள் வத்தகமாகின்றன, அதில் 1,264 பங்குகள் ஏற்றத்திலும், 925 பங்குகள் இறக்கத்திலும், 100 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்ரியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 2.99%
ஹெச் யூ எல் 2.63%
ஏ சி சி 2.28%
பி ஹெச் இ எல் 2.27%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.76%

இறக்கப் பங்குகள் :
சேசா ஸ்டெர்லைட் -3.71%
ஹிண்டால்கோ -3.30%
ஐ டி சி -2.85%
டாடா ஸ்டீல் -2.46%
ஹெச் சி எல் டெக் -1.77%

 

 

 

 

 நிலையான வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

 
இன்று காலை பங்குச் சந்தைகள் நிலையான ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 11 புள்ளிகள் அதிகரித்து 27437 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 8304 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில்; 10 கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 27055 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 64 ரூபாய் குறைந்து 2826 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.14 ரூபாயாக உள்ளது.
 
இதற்கிடையே உலக வங்கி சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 3.6 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதற்கு காரணம் ஐரோப்பிய பொருளாதாரத்தில் நிலவிய சரிவு தான் என்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 46 ரூபாயாக குறைந்து வருவது சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தையில் இன்று 398 பங்குகள் விலை அதிகரித்தும், 165 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.

விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹச்யூஎல் 2.46
அல்ட்ராடெக் சிமெண்ட் 2.46
ஏசிசி 2.03
பிஹச்இஎல் 1.67
ஜின்டால் ஸ்டீல் 1.51
 
விலை குறைந்த பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் -2.47
ஐடிசி -1.99
ஹிண்டால்கோ -1.78
டாடா ஸ்டீல் -0.96
ஹச்சிஎல் -0.70

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ