Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் ரகுராம் ராஜன்!

 இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் ரகுராம் ராஜன்

 
ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் இந்த வருடத்தின் சிறந்த கவர்னராக இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றின் மத்திய வங்கிகள் விருது 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இந்த விருதை 2014ல் அவரது திறமையான செயல்பாட்டிற்காகவும், இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய புரிதலுக்காகவும் வழங்கியுள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விருது கமிட்டி ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னரஅக எடுத்த முடிவுகளும், அவரது தெளிவான அணுகுமுறை மூலம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் வைத்துள்ளார். 
 
மேலும் ஐஎம்எஃப்பில் பணியாற்றியுள்ள ரகுராம் ராஜனின் கருத்துக்களை உலகம் உற்று கவனிக்கிறது அவரது முடிவுகள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விதமாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளது. ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை ரகுராம் ராஜனுக்கு இந்த விருதை வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.
 
இந்த விருதை ஏற்றுக்கொண்ட ரகுராம் ராஜன் ''இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் இந்த விருதி ஆர்பிஐ மற்றும் அதன் பணியாளர்களின் பங்களிப்பு அதிகம், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது, போட்டிகள் மூலம் புதிய வாய்ப்புகளை வங்கி மற்றும் நிதி சந்தையில் உருவாக்குவது போன்ற விஷயங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.
 
தற்போது இந்த்இய பொருளாதாரம் வளரும் பாதை திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ