Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உச்சத்தில் சென்செக்ஸ் நிஃப்டி!

உச்சத்தில் சந்தைகள்!
 
மதியம் 12:45 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 675 புள்ளிகள் அதிகரித்து 28070 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து 8478 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
10 கிராம் தங்கம் 26840 ரூபாய்க்கும்,ஒரு பேரல் கச்சா எண்ணெய் 3013 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61,69 ரூபாயாக உள்ளது.
 
இன்று காலை ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்தது சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது.பட்ஜெட்டுக்கு முன்பே ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்தது சந்தையில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் டிஎல் எஃப்,ஐசிஐசிஐ, பாரதி ஏர்டெல் பங்குகள் விலை அதிகரித்தும்,ஏசியன் பெயிண்ட்ஸ்,ஹச்யூஎல் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ