Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 728, நிஃப்டி 216 புள்ளிகள் அதிகரிப்பு!

 

இன்று காலை சந்தை ஆரம்பிப்பதற்கு முன் ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்தது. இத்னால் இன்றைய நாளில் சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 728 புள்ளிகள் அதிகரித்து 28075 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 216 புள்ளிகள் அதிகரித்து 8494 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்தன.
 
10 கிராம் தங்கம் 44 ரூபாய் அதிகரித்து 27245 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 2952 ரூபாய்க்கும் வர்த்தகமாகியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பி61.98 ரூபாயாக வர்த்தகமாகியது.
கச்சா எண்ண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு,, மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகிய காரணங்களால் பிப்ரவரி மாதம் குறைப்பதாய் கூறி இருந்த வட்டி குறைப்பை ஆர்பிஐ முன்னதாகவே செய்துள்ளது. அது இன்றைய சந்தை வர்த்தகத்தில் இந்திய சந்தைகளை 2.66 சதவிகிதம் அதிகரிக்க செய்துள்ளது.
 
விலை ஏறிய பங்குகள்!
டிஎல்எஃப் 10.84
ஹச்டிஎஃப்சி 7.34
ஐடிஎஃப்சி 7.25
அல்ட்ராடெக் 5.99
எஸ்பிஐ 5.12
விலை குறைந்த பங்குகள்!
ஏசியன் பெயிண்ட்ஸ் -0.39
டெக் மஹிந்த்ரா -0.35
ஹச்யூஎல் -0.27
ஹின்டால்கோ -0.18
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ