Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஜிட்டலாக அப்டேட் ஆகுங்கள்!


 

ன்று டிஜிட்டல் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நேற்று சமைத்த உணவு, இன்று சாப்பிட்டால் எப்படி கெட்டுப்போய் விடுமோ அதேபோல்தான் செய்திகளும், தகவல்களும் உடனுக்குடன் பகிரப்படாவிட்டால் பழைய தகவல் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் ஒரு நபர் தன்னை டிஜிட்டலாக அப்டேட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் எற்படுகிறது. அப்படி ஆகாவிட்டால் அவர் பணிபுரியும் இடத்திலோ அல்லது தொழிலிலோ பின்தங்கிய நிலையிலேயே இருப்பவராகப் பார்க்கப்படுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும், இன்றைய காலத்தின் கட்டாயத்துக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொள்ள நினைப்பவரும் முதலில் அவரை டிஜிட்டலாக அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான வழிமுறைகள் இதோ!

புதிய தொழில்நுட்பங்களுக்குப் பழகுங்கள்:

உங்களது அப்டேட் என்பது இன்றைக்கு உள்ள புதிய தொழில்நுட்பத்தைக் கற்பதிலிருந்து ஆரம்பிக்கட்டும். இதுநாள் வரை நீங்கள் சிரமப்பட்டு செய்து வந்த வேலையை ஒரு கணினி மென்பொருள் எளிதாகச் செய்யலாம். அந்த மென்பொருளை கற்று கொள்ளுங்கள். அப்படி கற்கும்போது உங்கள் அறிவும், வேலை திறனும் மேம்படும். மேலும், நேரமும் மிச்சமாகும். உதாரணமாக ஓர் அலுவலகத்தில் 10 பேருக்கான செலவுகளை நீங்கள்தான் கணக்கிடுகிறீர்கள் எனில், அந்த வேலையை ஒரு எக்ஸ்எல் படிவத்தில் கணக்கிடுவதுதான் உங்கள் டிஜிட்டல் அப்டேட்டின் ஆரம்பம். ஏற்கனவே கணினியில்தான் பணியைச் செய்கிறேன் என்பவர், அடுத்த தொழில்நுட்பங்களான ஆப்ஸ், புதிய மென்பொருள் ஆகியவற்றுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

துறை சார்ந்த அறிவு அவசியம்!

அடிப்படையாக ஒருவருக்கு கணினி மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த தெரிந்துள்ளது என்றால், அது மட்டும் போதாது. அது அவருக்கு அடிப்படை அறிவை மட்டும் வழங்குமே தவிர, அவரால் அவரது துறையில் சிறப்பாகச் செயல்பட முடியாது. அவரது துறை சார்ந்த தொழில்நுட்பங்களுக்குப் பழக வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் துறையில் இருப்பவர் அவரது துறை சார்ந்த ஆட்டோமொபைல் மென்பொருள் பற்றியும், பொருளாதாரத் துறையில் உள்ளவர்கள் நிதி தொடர்பான மென்பொருள் பற்றியோ தனது அறிவை வளர்த்து கொண்டால்தான் அவரால் அந்தத் துறையில் நீடிக்க முடியும்.

கேட்ஜெட் பழகுங்கள்!

உங்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள சிரமமாக உள்ளது எனில், முதலில் உங்களுக்குப் பழக்கப்பட்ட செல்போனிலிருந்து உங்களது டிஜிட்டல் அப்டேட்டை ஆரம்பியுங்கள். அதுவே உங்களை டிஜிட்டலாக அப்டேட் செய்ய ஏதுவாக அமையும். அதில் உள்ள ஆப்ஸ்கள் மூலம் உங்கள் திறனை அதிகரியுங்கள். அதிலிருந்து உங்கள் டிஜிட்டல் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

தெரிந்த விஷயத்தில் டிஜிட்டல் ஆகுங்கள்:

உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் முதலில் டிஜிட்டலைப் புகுத்துங்கள். ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் கணக்காளராக இருந்தால் முதலில் உங்களுக்கு நன்கு தெரிந்த தினசரி நீங்கள் செய்யும் அலுவலக கணக்குகளை ஒரு எக்ஸ்எல் படிவத்தில் செய்து அதனை சரிபாருங்கள். மிச்சமாகும் நேரத்தைக் கவனியுங்கள். டிஜிட்டல் அப்டேட்டில் இது முதல்படியாக இருக்கும்.

டுடோரியல்களைக் கவனியுங்கள்:

உங்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை அறிவு உள்ளது என்றால், நீங்கள் இணையதளத்தில் உள்ள அடிப்படைத் தகவல்கள் எனும் மென்பொருட்கள், சேவை பற்றிய டுடோரியல்களைப் பார்த்தோ அல்லது கேட்டோ நீங்கள் அந்த விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அப்படி செய்யும்போது உங்களது புரிதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ச.ஸ்ரீராம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ