Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்யூஎல்: மார்க்கெட் கேப்பிடலைசேஷன் 2 லட்சம் கோடியை தாண்டியது!

எஃப்எம்சிஜி துறை சார்ந்த நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலீவர். இந்த நிறுவனத்தின் சந்தை விலையானது (market value) இன்று காலை நிலவரப்படி 2,04,090 கோடி ரூபாய்க்கு சென்றிருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் தரவரிசைப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பெற்றிருக்கிறது.

இன்றைய சந்தை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கானது ரூ.944-க்கு வர்த்தகமாகி புதிய உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பங்கானது ஜனவரி 2,2015-ம்  தேதியில் 756 ரூபாய்க்கு வர்த்தகமானது. மாலை 3.30 மணி நிலவரப்படி 941.90 ரூபாய்க்கு வர்த்தகமானது.

மார்க்கெட் கேப்பிடலைசேஷன் தரவரிசைப் பட்டியலில் டிசிஎஸ் (495,303.54), ஓஎன்ஜிசி (295,506.63), ஐடிசி (287,315.59) ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றிருக்கின்றன. எட்டாவது இடத்தில் 2,34,685 கோடி ரூபாய் சந்தை விலையுடன் கோல் இந்தியா நிறுவனமும் , ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்கு அடுத்த இடமான பத்தாவது இடத்தில்  2,02,692 கோடி ரூபாயுடன் ஐசிஐசிஐ வங்கியும் இடம்பெற்றுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ