Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் சமூக வலைதளம் புரஃபஷனலாக உள்ளதா?

 

இந்தச் சமூக வலைதளங்களில் ஒருவர் கணக்கு வைத்திருக்கும்போது அது சில சமயம் அவர்கள் வேலை

செய்யும் அலுவலகத்தைப் பொறுத்து கண்காணிக்கப்படுவது உண்டு. குறிப்பாக சில ஐ.டி நிறுவனங்கள் தங்களது பணியாளர் எதுபோன்ற புரஃபைலை கொண்டுள்ளார் என்பதைத் தீர்மாணிக்கின்றன.


இப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்கள் சிலர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களை புரஃபஷனலாகப் பராமரிப்பர். அதில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைந்து காணப்படும். அவர்களது பக்கம் எப்படி இருக்கும்? / எந்தமாதிரியான பதிவுகளை அவர்கள் இடுவார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.
முதலில் புரஃபஷனலாக இருக்கும் ஒருவரது முகப்புப் படம் ஒரே படமாகத்தான் இருக்கும். அடிக்கடி அதனை மாற்றமாட்டார். அவரது அனைத்து சமூக வலைதளங்களிலும் பெரும்பாலும் ஒரே புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதுவும் சரியான ட்ரஸ் கோடுடன் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படமாக இருக்கும்.

அடிக்கடி தான் எங்கு இருக்கிறேன்? என்ன மனநிலையில் இருக்கிறேன்? எந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பது போன்ற நிலைத்தகவலை பதிய மாட்டார்கள். அவர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் இருந்தாலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யாதவராய் இருப்பார்.
அறிவு சார்ந்த விஷயங்களைத்தான் அதிகம் பகிர்ந்து கொள்பவராக இருப்பார். சமூகம் சார்ந்த விஷயங்கள், செய்தி குறித்த அவரது நோக்கம். அவரது இணையதளத்தில் எழுதும் கட்டுரைகளை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்வார்.

அவர்களது பதிவில் இன்றைய கால டிரெண்டிங் விஷயங்களான செல்ஃபி, வார இறுதி கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெறாது. தங்கள் நிஜ ஆளுமை போலவே சமூக வலைதளங்களிலும் சாதுவான போக்கையே கையாளுவார்கள்.



குறிப்பிட்ட அளவிலான நண்பர்கள் வட்டாரத்தை மட்டுமே கொண்டிருப்பர். அதுவும் அவரைப்போலவே புரஃபஷனலாக இருக்கும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். சமூக வலைதளங்களில் அனைத்திலும் தலைகாட்ட மாட்டார்கள். புரஃபஷனலாக உள்ள சமூக வலைதளங்களில் மட்டுமே இருப்பார்கள்.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் தங்கள் சமூக வலைதளங்களை மிகவும் கவனமாகப் பராமரிக்கிறார்கள். மற்றவர்கள் இவர்கள் பக்கங்களில் எழுத முடியாத படியும், இவர்களைக் குறிப்பிட்டு டேக் செய்யும் வசதிகளை ஆஃப் செய்தும் பயன்படுத்துவார்கள்.

இது சரியா?

சமூக வலைதளங்கள் பொழுதுபோக்குக்கான அமைப்பு என்கிறபோது சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து புரஃபஷனலாக இருப்பது சரியா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆனால், சமூக வலைதளங்கள் என்பது தனி மனிதரின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிக்கும் ஊடகமாக இருப்ப்பதால் அதனை அவர்கள் இருக்கும் புரஃபஷனல் லுக்கில் பராமரிப்பதில் எந்தத் தவறும் இல்லை!

உதாரணமாக ஒரு கல்லூரி பேராசிரியர் தனது வீக் எண்ட் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்டால், அவரை மாணவர்கள் அதே மனநிலையில்தான் அணுகுவார்கள். அதனால் சில சமயங்களில் புரஃபஷனலாகப் பராமரிப்பது அவசியமாகிறது.

அதனால் சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவரும் இதேபோன்று இருக்க வேண்டும் என்பதில்லை! இதனால் தங்கள் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற ஐயம் உள்ளவர்கள் மட்டும் இப்படிப் பயன்படுத்துவது நல்லது. மற்றவர்கள் செல்ஃபி முதல் ஃபீலிங் கிரேட் என ஸ்டேட்டஸ் போட்டு உங்கள் வாழ்வின் தருணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ச.ஸ்ரீராம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ