Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால் இந்திய ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.42 ரூபாயும், டீசலுக்கு 2.25 ரூபாயும் குறைத்துள்ளது. 
 
இந்த விலை குறைப்பு என்பது கிட்டத்தட்ட தற்போதைய விலை குறைப்பை விட இரண்டு மடங்காக இருந்திருக்க வேண்டும், ஆனால் இன்று கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்தது. அதனால் பெரிய விலை குறைப்பு ஏற்படவில்லை.
 
அதேபோல் பிராண்ட் அல்லாத பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8.95 ரூபாய் மற்றும் டீசலுக்கு 7.96 ரூபாய் கலால் வரியை விதித்துள்ளது.இந்த கலால் வரிவிதிப்பு 20000 கோடி கூடுதல் வருமானத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.கடைசியாக கடந்த டிசம்பர் 16ம் தேதி லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
 
கடந்த ஆகஸ்டில் இருந்து இது ஒன்பதவாது பெட்ரோல் விலை குறைப்பாகும். அதேபோல் ஐந்தாவது டீசல் விலை குறைப்பாகும். புதிய கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ