Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிர்லா சன் லைஃப் லைஃப் மேனுஃபேக்ச்சரிங் ஈக்விட்டி ஃபண்ட் அறிமுகம்!

பிர்லா சன் லைஃப் லைஃப் மேனுஃபேக்ச்சரிங் ஈக்விட்டி ஃபண்ட் !

பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புதிதாக பிர்லா சன் லைஃப் மேனுஃபேக்ச்சரிங் ஈக்விட்டி ஃபண்ட் (Birla Sun Life Manufacturing Equity Fund) என்கிற மியூச்சுவல் ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டெடு வகையைச் சார்ந்த இந்த ஃபண்டு மூலம் திரட்டப்படும் நிதி, இந்திய உற்பத்தி துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்டின் முதலீட்டுக் காலம் ஜனவரி, 13,2015 முதல் ஜனவரி 27, 2015 வரை. இதன் முகமதிப்பு ரூ.10.

கடந்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி துறையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 20.33 சதவிகிதமாக உள்ளது. கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் உற்பத்தி துறைச் சார்ந்த நிறுவனங்கள், அரசின் வருவாயில் 1.90,739 கோடி ரூபாய் அளவுக்கு பங்களித்துள்ளன. மற்றும் இந்த துறை நிறுவனங்கள், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 42,935 கோடி ரூபாயை டிவிடெண்ட்டாக வழங்கி இருக்கின்றன. இதன் அடிப்படையில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்த ஃபண்டை கொண்டு வந்துள்ளது. .
 


பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஏ. பாலசுப்பிரமணியன், ''இந்திய ஜிடிபி வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்க்கிறோம். மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நாட்டில் உற்பத்தி துறை வேகமான வளர்ச்சி காணும். இதன் மூலம் உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, ஏற்றுமதியும் அதிகரிக்கும்.. உற்பத்தி துறை மீது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் கொண்டிருக்கும் அக்கறை, பங்கு முதலீட்டின் மதிப்பை அதிகரிக்கும்" என்றார்.
ஏ. பாலசுப்பிரமணியன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ