Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 45 புள்ளிகள் ஏற்றம், சென்செக்ஸ் 172 புள்ளிகள் ஏற்றம்.

2.00 மணி நிலவரம்

 

நிஃப்டி 48.50 புள்ளிகள் ஏற்றம், சென்செக்ஸ் 189.90 புள்ளிகள் ஏற்றம்.

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 172.13 புள்ளிகள் அதிகரித்து 28294.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.65 புள்ளிகள் அதிகரித்து 8559.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

 

10 கிராம் தங்கத்தின் விலை 59 ரூபாய் அதிகரித்து 27,713  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 3,022 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.66 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

 

இந்திய சந்தையில் மூலதன பொருட்கள், வங்கி, கன்ஸ்யூமர் கூட்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அனைத்து துறையும் ஏற்றத்தில் வர்த்தகமாவதும் குறிப்பிடத்தக்கது.

 

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் அதிகபட்சமாக நிக்கி225 0.88 சதவிகிதம் ஏற்றத்திலும், ஷாங்காய் காம்போஸைட் 8.34 சதவிகித இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள் :

 

விப்ரோ        6.22%

கெயில்         3.98%

ஆக்ஸிஸ் பேங்க் 2.64%

அம்புஜா சிமென்ட்ட்ஸ் 2.57%

பார்தி ஏர்டெல்          2.22%

 

இறக்கப் பங்குகள் :

 

ஹெச் யு எல்           -2.06%

பிபிசிஎல்                    -1.93%

ஹீரோ மோட்டோ கார்ப்-1.71%

ஏசியன் பெயின்ட்ஸ்    -1.19%

 

12.45 மணி நிலவரம்

நிலையான ஏற்றத்தில்  இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 28422, நிஃப்டி 8543...!

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 122.13 புள்ளிகள் அதிகரித்து 28244.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.35 புள்ளிகள் அதிகரித்து 8543.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

 

10 கிராம் தங்கத்தின் விலை 58 ரூபாய் அதிகரித்து 27,712  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 3,061 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.71 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

 

12.45 மணி நிலவரப்படி இந்திய சந்தையில் உள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்காத நிலையிலும் அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள் :

விப்ரோ        5.74%

கெயில்           4.19%

ஆக்ஸிஸ் பேங்க் 2.56%

ஐ டி எஃப் சி                  2.04%

பி ஹெச் இ எல் 1.97%

 

இறக்கப் பங்குகள்

ஹெச் யு எல் -1.89%

பிபிசிஎல்          -1.80%

டி எல் எஃப்         -1.61%

ஹீரோ மோட்டோ கார்ப்-1.29%

ஹெச் டி எஃப் சி   -1.27%

 

 

11.00 மணி நிலவரம்

 


அதிவேக ஏற்றத்தில்  இந்திய சந்தைகள்...!


மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 207.31 புள்ளிகள் அதிகரித்து 28329.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 55.55 புள்ளிகள் அதிகரித்து 8569.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 


10 கிராம் தங்கத்தின் விலை 84 ரூபாய் அதிகரித்து 27,798 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3,036 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.70 ரூபாயாக வர்த்தகமாகிறது. 


மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,407 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,614 பங்குகள் ஏற்றத்திலும், 724 பங்குகள் இறக்கத்திலும், 69 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 


உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஹேங்சேங், ஜகர்தா காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள் :

விப்ரோ         6.66%

கெயில்               4.17%

ஐ டி எஃப் சி             2.58%

ஹெச் சி எல் டெக் 2.32%

ஆக்ஸிஸ் பேங்க் 2.20%


இறக்கப் பங்குகள் :

ஹெச் யு எல்              -1.39%

பவர் கிரிட் கார்ப்              -1.32%

பிபிசிஎல்                     -1.18%

கோட்டக் மஹிந்திரா     -0.68%

இன்ஃபோசிஸ்             -0.62%

 

 

9.30 மணி நிலவரம்

 
ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...!
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  140.21 புள்ளிகள் அதிகரித்து 28262.31 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.15 புள்ளிகள் அதிகரித்து 8553.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.48 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 162 ரூபாய் அதிகரித்து 27,654 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,806 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,624 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3,021 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.02 சென்ட் அதிகரித்து 47.69 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்ருக்கு 2.44 டாலர் அதிகரித்து 48.29 டாலருக்கு வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.67 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து நிலையாக குறைந்து கொண்டே வருகிறது. 
 
தற்போது இந்திய சந்தையில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் காஸ் ஆசிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ற்றப் பங்குகள் :
 
விப்ரோ            5.74%
ஹெச் சி எல் டெக்             2.89%
அல்ட்ராடெக் சிமென்ட்   1.97%
ஹிண்டால்கோ     1.91%
க்ராசிம்                     1.84%
 
இறக்கப் பங்குகள் :
 
ஹெச் யு எல்         -1.17%
ரிலையன்ஸ்         -0.76%
பிபிசிஎல்                 -0.72%
ஐ டி சி                  -0.67%
கோட்டக் மஹிந்திரா -0.51%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ