Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பான் சர்வே: முதலீடு செய்ய ஏற்ற நாடு இந்தியா!

ஜப்பான் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் கோ-ஆப்ரேஷன் என்கிற பேங்கிங் நிறுவனம் சமீபத்தில், ஜப்பானைச் சேர்ந்த 1,000 உற்பத்தி நிறுவனங்களில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வே மூலம், எதிர்கால முதலீட்டிற்கு ஏற்ற நாடுகள் தர வரிசைப் பட்டியலை அந்நிறுவனமானது வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவுக்கு முதல் இடமும், இந்தோனேஷியா மற்றும் சீனாவுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. ஜப்பான் நிறுவனங்களில் சில முக்கியமான நிறுவனங்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ