Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016ல் இந்தியா பொருளாதாரம் சீனாவை மிஞ்சும்: ஐஎம்எஃப்

சர்வதேச பணவியல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்திய பொருளாதார வளர்ச்சி 2016ம் ஆண்டில் சீனாவை மிஞ்சும் என்று கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 5.8 சதவிகிதமாக உள்ளது.

 
2015ல் இது 6.3 சதவிகிதமாகவும்,2016ல் 6.5 சதவிகிதத்தையும் எட்டும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது. இதே சமயத்தில் தற்போது 7.4 சதவிகிதமாக உள்ள சீனாவின் பொருளாதார வளர்ச்சி  2016ல் 6.3 சதவிகிதமாக குறையும் என்று கணித்துள்ளது. 
 
இதற்கு காரணமாக ஐஎம்எஃப் கூறுவது, இந்தியாவில் புதிய அரசின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும், சீர்திருத்தங்களும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும், மேலும் சீனாவில் முதலீடுகள் குறைந்து வருவதால் வளர்ச்சியில் பாதிப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளது.
 
இதன் கணிப்பின்படி 2016ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 6.5 சதவிகிதமாகவும், சீனா 6.3 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP