Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி வேலை நிறுத்தத்தில் புதிய முடிவு: கூட்டமைப்புகள் அறிவிப்பு

நாளை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

ஊதிய உயர்வை வலியுறுத்தி ஜனவரி 21 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். இவர்களுக்கான  ஊதிய உயர்வை 11 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அறிவித்திருந்தது. ஆனால் வங்கி கூட்டமைப்புகள் ஆரம்பத்தில் கேட்ட 23 சதவிகிதத்திலிருந்து தற்போது 19.5 சதவிகிதமாக குறைத்து கொண்டனர். இருப்பினும் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 
 
தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் ஆறு நாட்கள் வங்கி பரிமாற்றம் நடைபெறாது என்பதால் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும், பேச்சு வார்த்தைகள் தொடரும் ஆனால் பேச்சு வார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால் பிப்ரவரி முதல் வாரத்தில் வேலை நிறுத்தம் தொடரும் என்கிறார் வங்கி கூட்டமைப்பின் தலைவர் முரளி.
 
இதனையடுத்து வங்கி வேலை நிறுத்தத்தால் பாதிப்படையுமோ என்ற கவலையில் இருந்த மக்கள் இந்த அறிவிப்பால் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ