Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த சந்தைகள் சென்செக்ஸ் 28888, நிஃப்டி 8728

3.30 மணி நிலவரம்
 
 
ஏற்றத்தில் முடிந்த சந்தைகள் சென்செக்ஸ் 28888, நிஃப்டி 8728
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 104.19 புள்ளிகள் அதிகரித்து 28888.86 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.90 புள்ளிகள் அதிகரித்து 8729.50 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 92 ரூபாய் அதிகரித்து  28,177 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 24  ரூபாய் குறைந்து 2,917 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.62  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இன்று சென்செக்ஸில் மொத்தம் 3,035 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாயின. அவற்றில் 1,126 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1,706  நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும், 103 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 29 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 21 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. உலக அளவில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் பகல் இரண்டு மணி நிலவரத்திலேயே நீடிக்கிறது. 
 
ஏற்றப் பங்குகள் :
 
ஹெச் யூ எல் 3.28%
பார்தி ஏர்டெல் 3.65%
பேங் ஆஃப் பரோடா 3.74%
பி என் பி         3.20%
ஹெச் டி எஃப் சி 2.98%
 
 
இறக்கப் பங்குகள் :
 
ஐ டி சி                -4.96%
சிப்லா                   -2.77%
ஜி என்டர்டெயின்மென்ட் -2.34%
சேசா ஸ்டெர்லைட் -2.20%
 
 
 
 
 
2.00 மணி நிலவரம்
 
தேக்க நிலையில் சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 45.79 புள்ளிகள் அதிகரித்து 28830.46 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.05 புள்ளிகள் அதிகரித்து 8706.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 120 ரூபாய் அதிகரித்து  28,205 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 18  ரூபாய் குறைந்து 2,923 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.60  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
காலை சந்தை தொடக்கத்தை காட்டிலும் தற்போது சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகிறது. தற்போது மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி, மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், ஸ்மால் கேப், ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.  
 
 உலக அளவில்  அமெரிக்க சந்தைகள் தற்போது தேக்க நிலையிலும், இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசியாவில் நிக்கி மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
பேங் ஆஃப் பரோடா 3.74%
பார்தி ஏர்டெல் 3.65%
ஹெச் யூ எல் 3.28%
பி என் பி         3.20%
ஹெச் டி எஃப் சி 2.98%
 
 
இறக்கப் பங்குகள் :
 
ஐ டி சி                -4.61%
சேசா ஸ்டெர்லைட் -2.94%
சிப்லா                  -2.77%
என் எம் டி சி             -2.13%
 
 
 
 
 
12.30 மணி நிலவரம்
 
தொடர் ஏற்றம் சென்செக்ஸ் 28916
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 131.77 புள்ளிகள் அதிகரித்து 28916.48 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 27.80  புள்ளிகள் அதிகரித்து 8723.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 125 ரூபாய் அதிகரித்து  28,210 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 30  ரூபாய் குறைந்து 2,911 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.58  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சென்செக்ஸில் தற்போது 2,791 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அவற்றில் 1,107 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1,581 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும், 103 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 21 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 29 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
இந்திய சந்தைகளில் வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.  மெட்டல், எஃப்.எம்.சி.ஜி, ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
பேங் ஆஃப் பரோடா 3.79%
பார்தி ஏர்டெல் 3.30%
ஹெச் டி எஃப் சி 2.73%
ஹெச் யூ எல் 2.52%
எஸ் பி ஐ         2.50%
 
இறக்கப் பங்குகள் :
 
சிப்லா                 -2.75%
சேசா ஸ்டெர்லைட் -2.33%
ஐ டி சி                  -2.21%
ஹிண்டால்கோ -1.97%
என் எம் டி சி         -1.92%
 
 
 
 
11.00 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 28842, எப்போது 29000
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 57.90 புள்ளிகள் அதிகரித்து 28842.57 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.85  புள்ளிகள் அதிகரித்து 8702.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 69 ரூபாய் அதிகரித்து  28,154 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 26  ரூபாய் குறைந்து 2,915 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.61  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சென்செக்ஸ் தன் புதிய இலக்கான 29000 என்கிற இலக்கை நோக்கி வர்த்தகமாகிறது. வருகின்ற மூன்று முதல் நான்கு காலாண்டுகளில் வங்கியின் வட்டி விகிதங்கள் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் நிக்கி, கோஸ்பி தவிர மற்ற பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள் :
 
பேங் ஆஃப் பரோடா 4.30%
பார்தி ஏர்டெல் 3.01%
ஹெச் டி எஃப் சி 2.55%
எஸ் பி ஐ         2.44%
பி என் பி         2.15 %
 
இறக்கப் பங்குகள் :
 
சேசா ஸ்டெர்லைட் -3.16%
ஹிண்டால்கோ -2.35%
என் எம் டி சி           -2.10%
டி எல் எஃப்                        -1.92%
டாடா ஸ்டீல்        -1.64%
 
 
 
 
 
9.30 மணி நிலவரம்
 
ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 131.16 புள்ளிகள் அதிகரித்து 28915.83 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.35 புள்ளிகள் அதிகரித்து  8731.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 385 ரூபாய் அதிகரித்து  28,085 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு  2,663 ரூபாயாக வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,848 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 42 ரூபாய் குறைந்து 2,941 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை  பேரல் ஒன்றுக்கு 2.18 டாலர் குறைந்து 47.99 டாலருக்கு  வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 2.30 டாலர் குறைந்து 46.39 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.56  ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
தற்போது இந்திய சந்தைகளில் வங்கி, மூலதன பொருட்கள், மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மெட்டல், ஹெல்த் கேர், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
இண்டஸ் இண்ட் பேங்க் 2.18%
ஹெச் டி எஃப் சி                 2.14%
எஸ் பி ஐ                         1.46%
கோட்டக் மஹிந்திரா         1.22%
லார்சன்                 1.01 %
 
இறக்கப் பங்குகள் :
 
 சேசா ஸ்டெர்லைட் -2.03%
டாடா மோட்டார்ஸ் -1.64%
சிப்லா                 -1.57%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -1.09%
என் எம் டி சி         -1.07%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ