Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்தது!

இன்றைய சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 117.16 புள்ளிகள் உயர்ந்து 29006.02 என்கிற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 31.90 புள்ளிகள் உயந்து 8761.40  என்கிற நிலையிலும்  வர்த்தகமாகின. இன்றைய முடிவில்,  ஆட்டோ, ஹெல்த்கேர், ஐடி, எஃப்.எம்.சி.ஜி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் விலையானது அதிகரித்து முடிந்திருக்கிறது. சந்தை முடியும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.70 ரூபாயாக இருந்தது. பத்து கிராம் தங்கத்தின் விலை 27,905 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் 39,408 ரூபாயாகவும் வர்த்தகமானது. 

இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் அதிகமாக்க வாங்கப்பட்டிருக்கின்றன. இன்றைய விலை ஏற்றப்பங்குகளில் சன் பார்மா (3.85%) நிறுவனப் பங்கானது முதல் இடத்திலும், டிஎப் எஃப் (3.41%), ஆக்ஸிஸ் பேங்க் (3.20%) ஆக்கிய நிறுவனத்தின் பங்குகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே ஐடிஎஃப்சி (2.76%) மற்றும் டாடா மோட்டார்ஸ் (2.72%) நிறுவன பங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

டாப் 5 விலை இறக்க பட்டியலில், ரிலையன்ஸ், என்டிபிசி, பிஎன்பி, டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்குகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
 
 
1.30 மணி நிலவரம்:

இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 84.18 புள்ளிகள் உயர்ந்து 28973.04என்கிற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17.90 புள்ளிகள் உயந்து 8747.40 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. சமீபத்திய நிலவரப்படி ஆட்டோ, ஹெல்த்கெஎர், ஐடி, எஃப்.எம்.சி.ஜி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.66 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. பத்து கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் குறைந்து 27,900 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 252 ரூபாய் குறைந்து  39,671 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்:

சன்பார்மா                                       ரூ.919.00    3.73%
டிஎஃல்எஃப்                                     ரூ.147.85    2.89%
டாடா மோட்டார்ஸ்                    ரூ.567.20    2.85%
ஆசியன் பெயின்ட்ஸ்                ரூ.872.40    2.48%
ஐடிஎஃப்சி                                        ரூ.174.00    2.29%

இறக்கப் பங்குகள்:

ரிலையன்ஸ்                                     ரூ.886.05    -2.28%
என்டிபிசி                                             ரூ.140.60    -2.02%
பிஎன்பி                                                 ரூ.212.75    -1.50%
கெய்ர்ன் இந்தியா                            ரூ.234.90    -1.47%
ஹெச்சிஎல் டெக்                            ரூ.1,664.55    -1.35%
 
11.30 மணி நிலவரம்!
 
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 124.65 புள்ளிகள் உயர்ந்து 29013.51 என்கிற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 25.85 புள்ளிகள் உயந்து 8755.35 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. சமீபத்திய நிலவரப்படி ஆட்டோ, ஹெல்த்கேர், ஐடி, எஃப்.எம்.சி.ஜி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.67 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

மேலும் சுடசுட பல தகவல்கள் பதிவிடப்படும்...
 
காலை 9:30 மணி நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் ஏற்றத்தில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 141 புள்ளிகள் அதிகரித்து 29031 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 8751 புள்ளிகள் என்ற அலவிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 108 ரூபாய் குறைந்து  27,977 ரூபாய்க்கும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 2,948 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.54 ரூபாயாக உள்ளது.
 
சர்வதேச சந்தையில் அமெரிக்கா தெடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்று ஐரோப்பிய மத்திய வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் 721 பங்குகள் விலை அதிகரித்தும், 263 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன.

விலை அதிகரித்த பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்ஸ் 3.03
சன் பார்மா 2.41
ஜீ என்டர்டெயிண்மென்ட் 2.07
ஐடிசி 1.73
செஸா ஸ்டெர்லைட் 1.70

விலை குறைந்த பங்குகள்:
 
என்.எம்.டி.சி -1.48
கெய்ர்ன் இந்தியா -1.30
பாங்க் ஆஃப் பரோடா -1.12
ரிலையன்ஸ் -1.03
ஐசிஐசிஐ வங்கி -0.95
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ