Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு: உள்நாட்டு உற்பத்தி குறைவு!

இந்தியாவில் மும்பையில் கச்சா எண்ணெய் உற்பத்தியும், இயற்கை எரிவாயு அஸாம், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் உற்பத்தியாகி வருவதும் நாம் அறிந்ததே. சமீபத்திய செய்தி என்னவெனில், கடந்த டிசம்பர் மாதத்தில் உள்நாட்டில் உற்பத்தியாகும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது குறைந்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது (Ministry of Petroleum & Natural Gas) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2013-ம் ஆண்டில் 3.256 மில்லியன் டன்னாக இருந்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த டிசம்பர், 2014-ல் 1.4% குறைந்து 3.210 மில்லியன் டன்னாக இருக்கிறது. அதே போல இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று பில்லியன் குயூபிக் மீட்டரிலிருந்து 3.4% குறைந்து 2.896 பில்லியன் குயூபிக் மீட்டராக உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ