Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ. 900 விலை அதிகரிப்பு!

சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது சரிவில் இருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் அதிகமாக தங்கத்தை வாங்கினார்கள். சமீபத்திய நிலவரப்படி தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தின் 22 காரட்  தங்கத்தின் விலை சுமார்  ரூ. 900-க்கு மேல் அதிகரித்துள்ளது.   ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2,500 என்ற நிலையிலிருந்து ரூ. 2,600 என்ற நிலையை தாண்டி விற்பனையாகிறது.

இன்று(22.01.2015) காலை துவக்கத்திலே 22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.120 அதிகரித்து 21,424 ரூபாய்க்கும்,  22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,678 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார்கள். வரும் மாதம் திருமண சீஷன் என்பதாலும், தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுக்கிறது. இதுவும் தங்கத்தின் திடீர் உயர்வுக்கு காரணமாகும்.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.40,565 என்ற நிலையிலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.43.40 என்ற நிலையிலும் விற்பனையாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ