Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாரஸ்யமான கேட்ஜெட்கள்!

கேட்ஜெட் என்றாலே மொபைல்தான் என்ற கண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது. காரணம் மொபைலிலேயே அனைத்துவிதமான கேட்ஜெட்டுகளின் தேவைகளும் பெருமளவு பூர்த்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் மார்க்கெட்டில் பல புதுவித கேட்ஜெட்டுகளின் வரவுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட தேவைகளை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். என்னதான் மொபைல் போனில் எம்பி3 பாடல்கள் கேட்கும் வசதி இருந்தாலும், ஐபாடில் பாடல் கேட்கும் அனுபவத்தை மொபைல் போன் அளிக்காது. அதுபோலத்தான், பல கேட்ஜெட்டுகள் மார்க்கெட்டில் தனித்துவமான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கென வலம் வந்து கொண்டிருக்கின்றன. சுவாரஸ்யமான கேட்ஜெட்டுகளில் சில...

ஓம் மிதக்கும் ஸ்பீக்கர்கள்!

பிராண்டட் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் ட்ராபேக், மிகக் குறைவான சவுண்ட் மற்றும் குறைவான பேட்டரி பேக்கப். ஸ்மார்ட் போன்களின் சவுண்ட் குறைபாட்டை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்தி பல நிறுவனங்கள் விதவிதமான டிசைன்களில் ஸ்பீக்கர்களைத் தயாரித்து வருகின்றன.  அவற்றிலும் முற்றிலும் கவர்ச்சிகரமான, வித்தியாசமான கேட்ஜெட்டாக வளம் வருகிறது ஓம் ஒன் ஸ்பீக்கர்கள். மின்காந்த சக்தி மூலமாக மிதக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருப்பதுதான் மற்ற ஸ்பீக்கர்களுக்கும் இதற்குமான வேறுபாடு. 3.6'' டயாமீட்டர் அளவுள்ள பந்து வடிவில் மிதக்கும் இந்த ஸ்பீக்கர் 12 மணி நேரம் தாங்கக்கூடிய இன்பில்ட் பேட்டரியில் இயங்குகிறது.

இந்த பந்து வடிவ ஸ்பீக்கரை பறக்கவைப்பதற்கென மின்காந்த அடிப்பகுதியில் உள்ள ஓம் லோகோ ரம்மியத்தோற்றம் அளிக்கிறது. இதன் மொத்த எடை 950 கிராம். 10 மீட்டர் சுற்றளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் ப்ளு-டூத் மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம்
மற்றவர்களுக்கு தொல்லைத் தராமல் இசையை ரசிக்க இயர்போன்கள் பயன்படுகின்றன. ஆனால், அதே இயர்போனை இரவு தூங்கும்போது பயன்படுத்துவது அசெளகரியமான வேலை. இந்தக் குறையை கலைய தயாரிக்கப்பட்ட ஸ்பீக்கர்தான் மியூ ஸ்பீக்கர்கள். தலையணையைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எம்பி3 பிளேயர் மூலம் இரவு தூங்கும்போது பாடல் கேட்டும் அனுபவத்தை செளகரியமாக உணரலாம், மற்றவர்களுக்கும் தொல்லை கிடையாது.

மிதக்கும் புரஜெக்ட்டர்!

மிதக்கும்  ஸ்பீக்கர்களைப்போல தொடர்ந்து புரஜெக்ட்டர்களும் மிதக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மிதக்கும் ஸ்பீக்கரில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஐபோன் கீபோர்டு!

ஐபோன் பயன்பாட்டாளர்கள் அனைவருமே ஏதோவொரு தருணத்தில் அதன்  சிறிய அளவிலான டச் கீபேடில் டைப் செய்வதைச் சிரமமாக உணர்ந்திருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த qwerty கீபேட் ஐபோன் பயன்பாட்டாளர்கள் பலரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது. இதன்மூலம் வேகமாகவும் துல்லியமாகவும் டைப் செய்ய முடியும்.


இ ரோல்!
தற்போது பேப்பர் பயன்பாடுகளைப் பெருமளவு குறைக்க அனைத்து தரப்பினரும் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு உதவும் வகையில் அனைத்து புத்தகங்களும் தற்போது இ-புக்காக மாறிவருகிறது. பிடிஎஃப் ஃபைல்களை ஸ்மாட்போன், டேப்லெட் என அனைத்திலும் படிக்கலாம் என்றபோதும்,  இ-புக் படிப்பதெற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருப்பதுதான் இந்த இ ரோல். பேப்பரில் படிப்பது போன்ற உணர்வை தரும் வகையில் இதன் டிசைன் உள்ளது. மேலும், மடித்து எங்கு வேண்டுமாலும் எடுத்துச் செல்லலாம்.

- செ. தினேஷ்குமார் (மாணவ பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ