Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வர்த்தகத்தில் மஞ்சளும் மிளகும்!

நேற்று ஈரோடு மஞ்சள் மண்டியில் தரமான மஞ்சள் விலையானது அதிகரித்து வர்த்தகமானது. ஹைபிரிட் விரலி மஞ்சள் விலையானது ஒரு குவிண்டாலுக்கு 700 ரூபாய் அதிகரித்தும், ரூட் மஞ்சள் விலையானது ஒரு குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரித்தும் வர்த்தகமானது. அதே போல ஈரோட்டு ஏரியாக்களில் விளையும் மஞ்சள் ரகங்களும் 150-200 ரூபாய் வரை விலை அதிகரித்து காணப்பட்டன. புதிய மஞ்சள் வரத்துகள் ஆரம்பிரித்திருக்கும் நிலையில், நேற்று நிஜாமாபாத் சந்தைக்கு 3,000 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) வரத்து இருந்தது.

மிளகைப் பொறுத்தவரை அதன் வர்த்தகமானது நிலையாக காணப்படுகிறது. வர்த்தகர்கள் தற்போது இருக்கும் விலையில் வாங்க ஆர்வம் காட்டும்போது,  விற்பனையாளர்கள் குறைந்த அளவே வர்த்தகத்தில் ஈடுபடுவதால், மிளகு விலையை அதிகரித்து வர்த்தகப்படுத்த நினைக்கிறார்கள். இதனால் வர்த்தகர்கள் மிளகை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close