Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகள் 28%!

அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட 115 மில்லியன் சேமிப்பு கணக்குகளில் 28 சதவிகித கணக்குகள் மட்டும்தான் செயல்பட்டில் உள்ளன. இதன் மூலமாக 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் திரட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட கணக்குகள் பெரும்பாலும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் ஆகும்.

அதாவது கேஸ் மானியம், முதியோர் பென்ஷன் போன்ற அரசு வழங்கும் மானிய தொகையை   நேரடியாக பயன்பட்டாளரின்  வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காகதான்  ஜன் தன் யோஜானா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கப்பட்டது.எனவே வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகை அனைவருக்கும் நிதி சேவை துறை ஏற்று வங்கி கணக்கு செயல்பாட்டில் வைக்க திட்டமிட்டுள்ளது.

இதில் 71 சதவிகித கணக்குகள் பொது துறை வங்கியிலும், 61 சதவிகித கணக்குகள் தனியார் துறை வங்கிகளிலும் உள்ளன. இதில் ஜூரோ பேலன்ஸ் கணக்கு என்பது யெஸ் பேங்கில் 89 சதவிகிதமும், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 77 சதவிகிதமும், ஆக்ஸிஸ் வங்கியில் 75 சதவிகிதமும் உள்ளது.
இதேபோல ஜூரோ பேலன்ஸ் வங்கி கணக்குகள் எஸ்பிஐ வங்கியில் 95 சதவிகிதமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 84 சதவிகிதமும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ