Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகரிக்கும் சமூக வலைதள வேலைகள்!

இனி வரும் நாட்களில் சமூக வலைதளம் சார்ந்த நிறுவனங்களில் புதிதாக 1,200 பணியாளர்களை சேர்க்க இருக்கிறார்களாம். கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் 8,348 பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதே போல கூகுள் நிறுவனத்தில் 55,000 பணியாளர்களும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 1,27,000 பணியாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனம் 2014-ஆண்டின் மூன்றாவது காலாண்டு அடிப்படையிலான மொத்த வருமானத்தில், தனது ஒவ்வொரு பணியாளர்களின் மூலமும் 3,84,000 டாலர்கள் வருமானத்தையும், கூகுள் நிறுவனம் 3,00,000 டாலர் வருமானத்தையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,83,000 டாலர் வருமானத்தையும் ஈட்டியுள்ளன.

இன்றைய நிலையில் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும் என்று நம்பப்படுகிறது. நிறுவனங்கள் ஒவ்வொரு பணியாளர்களிடமிருந்து அதிகமான வருமானத்தை பெறும்போது, பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தையும் நிச்சயமாக அதிகரித்து கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

வேலை இல்லா இளைஞர்கள் கவனிக்க..!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP