Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி: நிகர லாபம் 18% அதிகரிப்பு!

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின்  சில்லறை வர்த்தகமானது 12% அதிகரித்ததால், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 18% அதிகரித்திருக்கிறது. அதே போல வங்கியின் வாராகடன் விகிதமும் 0.66% அதிகரித்து காணப்படுகிறது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் 18% அதிகரித்து 492 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 416 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் வங்கியின் இதர வருமானம் நான்கு சதவிகிதம் குறைந்து 206 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது இந்த வங்கியின் பங்கு விலையானது 980.25 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ