Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல் அண்டு டி: நிகர லாபம் 66% அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, எல் அண்டு டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 66% அதிகரித்து 182 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 110 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல நிகர வாராக் கடன் 5% அதிகரித்து 863.3 கோடி ரூபாயாகவும், மொத்த வாராக்கடன் விகிதம் 8% அதிகரித்து 1,326.5 சதவிகிதமாகவும் காணப்படுகிறது.

இந்த நிறுவனம் தற்போது நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 21,336 கோடி ரூபாயாக உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 25% -ஆக காணப்படுகிறது. அதே போல நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 5.66 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 5.23 சதவிகிதமாக இருந்தது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனானது 20% அதிகரித்து 45,225 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 37,820 கோடி ரூபாயாக இருந்தது.

இன்றைய பங்குச் சந்தை முடிவில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 8.75 ரூபாய் அதிகரித்து 1663.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close