Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய மாம்பழம் ஏற்றுமதி: ஐரோப்பிய தடை நீக்கம்!

ஐரோப்பிய நாட்டு அரசானது இந்தியாவில் உற்பத்தியாகும் மாம்பழங்களை இறக்குமதி செய்யக்கூடாது என்கிற தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை சமீபத்தில் ரத்து செய்திருக்கிறது. அதனால் இனி ஏற்றுமதியாளர்கள் இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (Agricultural & Processed Food Products Export Development Authority - APEDA ) தெரிவித்துள்ளது.

கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் மட்டும் இங்கிலாந்து (3,,381.08 டன்), பிரான்ஸ் (185.76 டன்), நெதர்லாந்து (183.62 டன்), சுவிச்சர்லாந்து (140.42 டன்), ஜெர்மனி (103.67 டன்), நார்வே (45.21 டன்), பெல்ஜியம் (20.41 டன்), ஸ்வீடன் (19.57 டன்), அயர்லாந்து (16.40 டன்), ஆஸ்திரேலியா (8.45 டன்), இத்தாலி (7.93 டன்), ஸ்பெயின் (3.65 டன்) மற்றும் போர்ச்சுக்கல் (2.46 டன்) ஆகிய நாடுகளுக்கு இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதியாகி இருக்கின்றன.


 

நிதி ஆண்டுகள் அடிப்படையில் மாம்பழ ஏற்றுமதியை பார்க்கும் போது கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் மொத்தம் 41,280.01 டன் (500.55 மில்லியன் டாலர்), 2012-13-ம் நிதி ஆண்டில் 55,584.98 டன் (48.54 மில்லியன் டாலர்), 2011-12-ம் நிதி ஆண்டில் 63,441.27 டன் (43.73 மில்லியன் டாலர்) மற்றும் 2010-11-ம் நிதி ஆண்டில் 58,863.41 டன்னாக (36.19 மில்லியன் டாலர்) காணப்படுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது மாம்பழத்தின் ஏற்றுமதி அளவு குறைந்திருந்தாலும், அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close