Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோயா ஆயில் இறக்குமதி: இரண்டு மில்லியன் டன்னாக அதிகரிப்பு!

இந்தியாவில் சோயாபீன் உற்பத்தி குறைவாக காணப்படுகிறது. ஆனால் சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் சோயா ஆயில் நுகர்வானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாகவே அதிக அளவிலான சோயா ஆயில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில், சோயா ஆயில் இறக்குமதியானது இரண்டு மில்லியன் டன்னாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த தகவலை எஸ்இஏ (Solvent Extractors Association of india) அதன் அறிக்கையில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சோயா ஆயில் இறக்குமதி ஏழு மடங்கு அதிகரித்து 1,21,097 டன்னாக காணப்பட்டது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 14,980 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய்த் தொழில் மற்றும் வர்த்தக மைய அமைப்பு (Central Organisation for Oil Industry and Trade - COOIT) கணிப்பின்படி இந்தியாவில் சோயாபீன் உற்பத்தி 9.17 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும், சோயா ஆயில் உற்பத்தி 1.30 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ