Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்: 80%-ஆக அதிகரிக்க ஸ்நேப்டீல் திட்டம்!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் மோகமானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம்  பெரும்பாலான பொருட்களை ஆன்லைன் மூலம் பெறுவது மலிவு என்பதால் இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையானது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால், அவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு இலக்குகளை நியமித்து வருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்நேப்டீல் நிறுவனம் தனது ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களில் 80% பேரை மொபைல் போன் மூலம் ஷாப்பிங் செய்ய வைக்க வேண்டும் என்கிற இலக்கை நியமித்திருக்கிறார்கள். இந்த ஷாப்பிங் வலைதளத்தின் 10 கோடி ஸ்மார்ட்போன் ஆண்டுராய்டு ஆப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டின் இறுதி வரை ஸ்நேப்டீல் வலைதளத்தில், மொபைல் போன் மூலம் ஷாப்பிங் செய்திருந்தவர்கள் 60% பேர் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தனது வர்த்தக மையத்தை புதுப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் தனது ஷாப்பிங் வலைதளம் வாயிலாக இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை விற்றிருக்கிறது. மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் விற்க முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ