Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரிச் சேமிப்பு: தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்...!

 வருமான வரிச் சேமிப்பு: தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்...!

 
நம்மில் பெரும்பாலோர் ஆண்டு முழுக்க பிசியாக இருந்துவிடுகிறோம். இதனால், வருமான வரி முதலீட்டை சேமிப்பை மேற்கொள்ளும் போது பல்வேறு தவறுகளை செய்கிறோம். அவற்றில் முக்கியமான 5 தவறுகளையும் அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் பார்ப்போம். 
 
1. ஒரே பிரிவில் முதலீடு
 
வருமான வரி சேமிப்புக்காக சிலர் ரிஸ்க் அதிகமான திட்டங்களில் (இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள், யூலிப் பாலிசிகள்) மட்டுமே முதலீட்டை மேற்கொள்கிறார்கள்.  சிலர் பிஎஃப், பிபிஎஃப், எஃப்டி, என்எஸ்சி மட்டுமே முதலீடு செய்கிறார்கள். இது தவறு. கலந்து முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதோடு, ரிஸ்க்க்கும் பரவாலாக்கப்படுகிறது. 
 
உதாரணத்துக்கு ஒருவர் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளில் மட்டுமே வரிச் சேமிப்புக்கான முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். லாக் இன் பிரீட் முடிந்து சில ஆண்டுகள் கழித்து, அவர் முதலீட்டை திரும்ப எடுக்கும் அவசர சூழ்நிலையில் சந்தை இறக்கத்தில் இருந்தால், நஷ்டத்தோடு வெளியே வரவேண்டி இருக்கும். இதுவே அவர் கலவையாக முதலீடு செய்திருந்தால் ஏதாவது ஒரு முதலீடு மூலம் நஷ்டப்படாமல் நிலைமையை சமாளித்துக் கொள்ள முடியும்.
மேலும் நீண்ட காலத்தில் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் மூலம் கணிசமான லாபத்தை எதிர்பார்க்க முடியும். இவை கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 25%, மூன்றாண்டுகளில்  30% வருமானத்தை தந்திருக்கின்றன.
 
2 கடைசி நேரத்தில் முதலீடு
 
நிதி ஆண்டு ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்திலேயே வரிச் சேமிப்புக்கான முதலீட்டை ஆரம்பிக்காமல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் சிலர் திட்டமிடுகிறார்கள். இன்னும் சிலர், மார்ச் மாத ஆரம்பித்தில்தான் வரி முதலீட்டை பற்றியே யோசிக்கிறார்கள். இப்படி கடைசி நேரத்தில் திட்டமிடும் போது சரியான முதலீட்டை மேற்கொள்ள முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. 
சிலர் ரூ. 25,000, ரூ. 50,000 பிரீமியம் கட்டுவது போல் யூலிப் பாலிசியை எடுத்து விடுகிறார்கள். அடுத்த ஆண்டும் இதே அளவுக்கு அவர்களால் பிரீமியம் கட்ட முடியாமல் போனால், அந்த பாலிசி வீணாகிவிடும். 
 
சிலர் இஎல்எஸ்எஸ் ஃபண்டில் கடைசி மாதங்களில் மொத்த முதலீட்டையும் மேற்கொள்கிறார்கள். அப்போது சந்தை உச்சத்தில் இருந்தால், குறைவான யூனிட்களே கிடைக்கும். இதனால், பின்னால் நஷ்டப்படவோ, குறைவான வருமானம் கிடைக்கவோ கூடும். இதற்கு பதில் ஆண்டு ஆரம்பத்திலேயே எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) முறையில் முதலீட்டை மேற்கொண்டால் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், முதலீட்டுக்கான நிதி திரட்டுவதும் எளிதாக இருக்கும். 
 
3. கடன் வாங்கி முதலீடு 
 
சிலர் கடைசி நேரத்தில் வருமான வரிச் சேமிப்பு முதலீட்டுக்கான தொகை, கைவசம் இல்லாத போது கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள். இது தப்பு. உதாரணத்துக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.5,000 வரி (10 சதவிகித வரி வரம்பில் இருப்பவருக்கு ) மிச்சமாகும் என நகையை அடகு வைத்தோ, பெசனல் கடன் வாங்கியோ முதலீடு செய்கிறார்கள்.
 
கடன் வட்டியை கணக்கிடும் போது வரிச் சேமிப்பு லாபமாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதை கவனித்தில் கொள்வது அவசியம்
 
 
4. 80சியை தாண்டியும் வரிச் சலுகைகள்
 
நம்மில் பலர் வருமான வரிச் சேமிப்பை முதலீடாக பார்ப்பதால், 80 சி பிரிவை தாண்டி யோசிக்காமல் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இன்றைய வேகமான நவீன உலகில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. ஆனால்,லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் அளவுக்கு நம்மவர்கள்,  ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதில்லை. வரியை மிச்சப்படுத்த இந்த பாலிசிய எடுத்துக் கொண்டால் வரிதாரருக்கும் அவரின் குடும்பத்தாரருக்கும் பாதுகாப்பாக இருக்கும். 
 
5. தேவை இல்லாத இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு
 
நம்மில் பலரின் வருமான வரி முதலீட்டில் முதல் இடத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இடம் பிடித்திருக்கின்றன. சிலர் ஆண்டுக்கு ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரிக்கும் போது வரியை சேமிக்க புதுப்புது யூலிப் அல்லது என்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் வரிச் சேமிக்கப்பட்டாலும் அதிக பிரீமியத்தில் குறைவான கவரேஜ் அல்லது குறைவான வருமானத்தை பெறுகிறார்கள். 
 
ஆண்டு வருமானத்தை போல் குறைந்தபட்சம் 10 மடங்கு தொகைக்கு டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, மீதியை இதர முதலீட்டு திட்டங்களில் (பிஎஃப், பிபிஎஃப், இஎல்எஸ்எஸ்)போடுவது லாபகரமாக இருக்கும்.
 
- சி.சரவணன் 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ