Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 8900! உச்சத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

 நிஃப்டி 8900! உச்சத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!
 
இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 292 புள்ளிகள் அதிகரித்து 29571 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 8900 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 138 ரூபாய் விலை குறைந்து  27,726 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 30 ரூபாய் குறைந்து 2,807 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.46 ரூபாயாக உள்ளது.
 
தனியார் வங்கி பங்குகள் அதிகரித்ததாலும், நிதி சார்ந்த பங்குகளின் ஏற்றத்தாலும் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி முடிந்தன. நிஃப்டி 8900 புள்ளிகளை கடந்தும், சென்செக்ஸ் 29500 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஆக்ஸிஸ் வங்கி 4.77
சிப்லா                 4.34
ஐசிஐசிஐ வங்கி 3.45
ஏசியன் பெயிண்ட்ஸ் 3.29
ஐடிசி                 3.06
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாக்டர் ரெட்டி லேப் -4.10
கெய்ர்ன் இந்தியா         -3.72
ஐன்ஃபோசிஸ்         -3.55
கோல் இந்தியா -3.05
எம்&எம்                  -2.75
 
 

தொடர் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

மதியம் 2 மணி நிலவரம்:
 
இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்து 29345 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து 8847 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 203 ரூபாய் விலை குறைந்து  27,661 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 46 ரூபாய் குறைந்து 2,791 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.42 ரூபாயாக உள்ளது.
 
வங்கி மற்றும் மோட்டார் துறை பங்குகள் விலை அதிகரித்து காணப்படுகின்றன. ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்ஸ் 3.24
சிப்லா 2.90
ஆக்ஸிஸ் வங்கி 2.63
ஐசிஐசிஐ வங்கி 2.43
ஐடிசி 2.35
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாக்டர் ரெட்டி லேப் -4.39
கெய்ர்ன் இந்தியா -3.89
கோல் இந்தியா -3.85
இன்ஃபோசிஸ் -3.48
எம்&எம் -3.08

காலை 11.15 மணி நிலவரம்

தொடர் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 87.14 புள்ளிகள் அதிகரித்து 29365.86 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.85 புள்ளிகள் அதிகரித்து 8848.45 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின்றன.  


இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 247 ரூபாய் விலை குறைந்து  27,617 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட்  தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,815 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,632 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.


 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 31 ரூபாய் குறைந்து 2,806 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 0.63 டாலர் குறைந்து 48.16 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ண்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.44 டாலர் குறைந்து 45.15 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.42 ரூபாயாக உள்ளது. 

 

தற்போது இந்திய சந்தைகளில் மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருக்கின்றன.  ஐ.டி, மெட்டல், டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள்:

 ஏசியன் பெயின்ட்ஸ் 3.28%

ஆக்ஸிஸ் பேங்க்          2.34%

டாடா மோட்டார்ஸ் 1.93%

சிப்லா                               1.84%

லார்சன்           1.81%

 

இறக்கப் பங்குகள்:

 டாக்டர் ரெட்டில் லேப்ஸ் -4.29

கோல் இந்தியா -3.08

எம் அண்ட் எம் -2.92

இன்ஃபோசிஸ்          -2.72

கெய்ர்ன் இந்தியா           -2.72

 

 

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்:


காலை 9:30 மணி நிலவரம்
 
இன்றைய காலை சந்தை வேகமான ஏற்றத்தில் துவங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 60 புள்ளிகள் அதிகரித்து 29339 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 8839 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின்றன.  
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 172 ரூபாய் விலை குறைந்து  27,864 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 54 ரூபாய் குறைந்து 2,837 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.46 ரூபாயாக உள்ளது. 
 
ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகளிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுவதும் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளன.

விலை அதிகரித்த பங்குகள்:
 
டாடா பவர்                         2.36
டாடா மோட்டார்ஸ் 2.35
பிஹச்இஎல்                1.93
சிப்லா                        1.76
லார்சன்                1.53
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஹிண்டால்கோ         -3.04
இன்ஃபோசிஸ்                 -2.30
டாக்டர் ரெட்டில் லேப்ஸ் -2.05 
அம்புஜா சிமெண்ட்ஸ்          -2.02
கெய்ர்ன் இந்தியா                   -1.75
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ