Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி vs ஒபாமா! பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன?

ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.  டெல்லியில் இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசினர். அப்போது மோடி பேசும்போது, ''இந்தியாவில் வணிகம் செய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தித்தர அரசு விரும்புகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும். ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது. நாட்டின் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தூய்மையான எரிசக்தியை பெற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய வேளாண் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். திறமை, நோக்கம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். மிகப்பெரிய திட்டங்கள் பிரதம அலுவலகத்தால் கண்காணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு.
 
நீங்கள் ஒரு திறந்த சூழலை தேடினால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம் மற்றும் உங்களுடைய திட்டத்தில் உங்களுடன் பயணிப்போம். நம்மிடம் இளைஞர்கள் சக்தி உள்ளது. பசுமை புரட்சி இலக்கை எட்ட இந்தியர்களாகிய நாம் கடுமையாக உழைத்துள்ளோம். உலக பொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதில் முக்கிய நங்கூரமாக இந்தியா இருக்கும். இந்தியா-அமெரிக்க ஒன்றாக இணைந்து இந்த உலகை அனைவருக்கும் நல்லதாக உருவாக்கும்" என்றார்.
 
அதன் பின்னர் நடைபெற்ற இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாட்டில் ஒபாமா பேசும்போது, ''இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும். இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும்" என்றார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு பின் டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
 
அமெரிக்க தரப்பில், பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இந்திரா நூயி உள்பட 30 பேர் கலந்து கொண்டனர். இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் விசா நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினர்.
 
இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் பேசும்போது, ''இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டணி கொண்ட நாடுகள். இந்தியர்கள் உலகம் முழுவதும் தொழில் நிறுவங்களை தொடங்க வேண்டும். இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி செல்ல வேண்டும். அமெரிக்கா இந்தியாவில் முதலீடு செய்கிறது. ஆனால் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்கிறனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத வணிக திறமையாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
 
இரு நாட்டு வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது" என்றார். இந்தியா முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 1 பில்லியன் டாலருக்கு அதிகமாக கடன் வழங்க ஓப்பெக் ஆதரவு தெரிவிக்கும்" என்றார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ