Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி சுசூகி : நிகர லாபம் 18% அதிகரிப்பு!


கார் உற்பத்தியாளர்களில் மிகப் பெரிய நிறுவனாம மாருதி சுசூகி, சமீபத்தில் அதன் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதனடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபமானது 18% அதிகரித்து 802 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 681.15 கோடி ரூபாயாக இருந்தது.

அதே போல, கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 10,619.70 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர விற்பனை, நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 15.5% அதிகரித்து 12,263.10 கோடி ரூபாயாக காணப்படுகிறது. யூனிட்கள் விற்பனை அடிப்படையில் பார்க்கும் போது நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 12.4% அதிகரித்து  3,23,911-ஆக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,88,151-ஆக இருந்தது.

உள்நாட்டு விற்பனை 2,68,185-லிருந்து 2,95,202 யூனிட்கள் என்கிற அளவிலும், கார் ஏற்றுமதி 19,966 என்கிற நிலையிலிருந்து 19,966 யூனிட்கள் என்கிற அளவிலும் அதிகரித்து காணப்படுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ