Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேக்கத்தில் சந்தைகள் சென்செக்ஸ் 29559, நிஃப்டி 8914...!

 
3.30 மணி நிலவரம்
 
தேக்கத்தில் சந்தைகள் சென்செக்ஸ் 29559,  நிஃப்டி 8914...! 
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.86 புள்ளிகள் குறைந்து 29559.18 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.80 புள்ளிகள் அதிகரித்து  8914.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 57 ரூபாய் குறைந்து 27,845 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 27 ரூபாய் குறைந்து 2,815 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.36 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
பகல் 12.00 மணிக்கு ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் ஆகிய துறைகள் இன்றைய சந்தையின் வர்த்தக முடிவில் இறக்கத்தில் வர்த்தகமாயின. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஐ.டி, ஆயில் & காஸ் ஆகிய துரை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
 
சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,947 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாயின. அவற்றில் 1,091 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 1,744 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 112 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தைகளில் 23 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 26 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகளில் நாஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் தற்போது தேக்க நிலையில்  வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் மாற்றமின்றி தேக்க நிலை நிலவுகிறது. அதிகபட்சமாக கோஸ்பி 0.47% ஏற்றத்துடனும், ஷாங்காய் காம்போஸைட் 1.40% இறக்கத்துடனும் வர்த்தகமாயின.  
 
ஏற்றப் பங்குகள் :
 
 டி எல் எஃப்                  2.85%
ஹெச் சி எல் டெக்          2.63%
 ஹெச்டிஎஃப்சி                 2.22%
டெக் மஹிந்திரா 2.18%
விப்ரோ          2.17%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல்                -4.69%
சேசா ஸ்டெர்லைட் -3.28%
ஜிண்டால் ஸ்டீல்          -2.89%
டாடா மோட்டார்ஸ்       -2.73%
லார்சன்                 -2.68%
 
 
 
 
 
2.00 மணி நிலவரம் 
 
நிலை கொள்ளாத  இந்திய சந்தைகள்....!
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 12.39 புள்ளிகள் குறைந்து 29583.43 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.25 புள்ளிகள் குறைந்து 8917.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 46 ரூபாய் குறைந்து 27,856 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 28 ரூபாய் குறைந்து 2814 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.35 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
தற்போது மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,821 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அவற்றில் 1,028 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 1,670 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 123 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தைகளில் 22 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 28 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் தேக்க நிலை காணப்படுகின்றன.  
 
ஏற்றப் பங்குகள் :
 
 ஹெச்டிஎஃப்சி          2.55%
ஹெச் சி எல் டெக்          2.27%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.05%
டெக் மஹிந்திரா 1.83%
பி என் பி         1.39%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல்                 -4.88%
பி ஹெச் இ எல் -2.63%
லார்சன்          -2.41%
டாடா மோட்டார்ஸ்       -1.63%
சேசா ஸ்டெர்லைட் -2.19%
 
 
 
 
12.00 மணி நிலவரம்
 
திடீர் மாற்றம்.... ஏற்றத்தில் இந்திய சந்தைகள்....!
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 103.42 புள்ளிகள் அதிகரித்து 29674.46 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.35 புள்ளிகள் அதிகரித்து 8952.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 14 ரூபாய் குறைந்து 27888 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2845 ரூபாயாக வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2660 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 23 ரூபாய் குறைந்து 2819 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.44 டாலர் அதிகரித்து 49.60 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.08 டாலர் அதிகரித்து 46.23  டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.40 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
தற்போது இந்திய சந்தைகளில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வங்கி, ஹெல்த் கேர், ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
ஏசியன் பெயின்ட்ஸ் 2.92%
ஹெச் சி எல் டெக்         2.92%
டெக் மஹிந்திரா 2.25%
பிபிசிஎல்                  2.16%
டி சி எஸ்                 1.52%
 
இறக்கப் பங்குகள் :
 
பார்தி ஏர்டெல்          -2.40%
கெர்ய்ன் இந்தியா          -1.92%
டாடா மோட்டார்ஸ் -1.63%
டாடா ஸ்டீல்         -1.41%
 
 
இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

காலை 9:30 மணி நிலவரம்
 
இன்றைய காலை சந்தை  சரிவில்  துவங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 29542 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 3 புள்ளிகள் சரிந்து 8907 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின்றன.  
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 38 ரூபாய் விலை அதிகரித்து 27,902 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5 ரூபாய் அதிகரித்து  2,842 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.51 ரூபாயாக உள்ளது. 
 
அமெரிக்க பொருளாதார தகவல்கள் எதிர்பார்த்தபடி அமையாததும், கார்ப்பரேட் வருமானம் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் அமைந்தது அமெரிக்க சந்தைகளின் சரிவுக்கு காரணமாகின. இதன் தாக்கம் ஆசிய சந்தைகளிலும் காணப்பட்டது.இதனால் 11 வருட உயர்வில் இருந்த டாலர்  மதிப்பு குறைந்து காணப்பட்டது. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஐடிஎஃப்சி 2.54
ஏசியன் பெயிண்ட்ஸ் 2.11
மாருதி சுசுகி 1.84
சன் பார்மா 1.75
ஹச் சி எல் டெக் 1.21
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாடா மோட்டார்ஸ் -1.98
கெய்ர்ன் இந்தியா -1.90
ஜின்டால் ஸ்டீல் -1.26
பாரதி ஏர்டெல் -1.19
டாடா ஸ்டீல் -1.02
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP