Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 123, நிஃப்டி 38 புள்ளிகள் உயர்வு!

 
இன்று பங்குச் சந்தையானது இறக்கத்தில் தொடங்கியிருந்தாலும், ஏற்றத்திலேயே முடிவடைந்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 122.59 புள்ளிகள் உயர்ந்து 29681.77 என்கிற நிலையில் முடிவடைந்திருக்கிறது. அதே போல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38.05 புள்ளிகள் உயர்ந்து 8952.35 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் 1,428 பங்குகள் ஏற்றத்திலும், 1,459 பங்குகள் இறக்கத்திலும், 256 பங்குகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் வர்த்தகமானது. சந்தை முடியும்போது பத்து கிராம் தங்கத்தின் விலை 27,754 ரூபாயாகவும், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.68 ரூபாயாகவும் காணப்பட்டது.

ஏற்றப்பங்குகள்:

பிபிசிஎல்                                           733.85    3.91
டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரிஸ்    3,363.30    3.84
ஹெச்டிஎஃப்சி பேங்க்                   1,095.00    3.46
பிஹெச்இஎல்                               287.90    3.10
அம்புஜா சிமெண்ட்ச்                   255.95    2.77

இறக்கப் பங்குகள்:

பிஎன்பி                            199.10    -3.68
ஆசியன் பெயின்ட்ஸ்    881.30    -3.18
பேங்க் ஆஃப் பரோடா    217.15    -2.86
கோல் இந்தியா                374.95    -2.31
எஸ்பிஐ                            327.00    -2.27
 
1.45 மணி நிலவரம்
 
இறக்கம் தொடரும் இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 29521....!
 
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37.34 புள்ளிகள் குறைந்து  29521.84 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியிடான  நிஃப்டி 16.00 புள்ளிகள் குறைந்து 8898.30 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி  வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 39 ரூபாய் விலை குறைந்து  27,780 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 28 ரூபாய் குறைந்து 2,744 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.45 ரூபாயாக உள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி எண்ணெய் மற்றும் காஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மெட்டல், பொதுத்துறை நிறுவனம், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன். ஆசியாவிலும் பெரும்பாலான பங்குச் சந்தைகள் இறக்கத்திலும் மற்ற சந்தைகள் தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
 
லுபின்                        2.80%
ரிலையன்ஸ்                  2.75%
டி எல் எஃப்                         2.51%
ஹெச் டி எஃப் சி பேங்க்         2.32%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்   1.91%
 
இறக்கப் பங்குகள் :
 
ஏசியன் பெயிண்ட்ஸ் -3.32%
கோல் இந்தியா          -3.14%
பி என் பி                  -3.07%
ஹெச் சி எல் டெக்          -2.55%
 
 
11.30 மணி நிலவரம்:
 
இந்திய சந்தைகள் இன்று ஆரம்பம் முதலே சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. 11.30  மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 129.38 புள்ளிகள் சரிந்து 29429.80 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 39.10 புள்ளிகள் சரிந்து 8875.20 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி  வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 21 ரூபாய் விலை அதிகரித்து  27,780 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 18 ரூபாய் குறைந்து 2,754 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.53 ரூபாயாக உள்ளது.

தற்போதைய நிலையில் ஹெல்த்கேர், ஆயில் அண்டு கேஸ், கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி போன்ற ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.


ஏற்றப் பங்குகள்:
ரிலையன்ஸ்                                          926.70       2.19
ஹெச்டிஎஃப்சி பேங்க்                         1,080.45     2.09
பிபிசிஎல்                                                  720.85        2.07
டாக்டர் ரெட்டி லெபாரட்டரி            3,305.90      2.06
லுபின்                                                       1,540.65     1.66

இறக்கப் பங்குகள்:
கோல் இந்தியா                           369.15        -3.82
ஹெச்டிஎஃப்சி                             1,312.75    -2.37
பார்தி ஏர்டெல்                              365.35       -2.21
ஹெச்சிஎல் டெக்                       1,625.00    -2.07
ஜிண்டால் ஸ்டீல்                       152.00       -2.00
 
 
 
சரிவில் தொடங்கிய இந்திய சந்தைகள் ! காலை 9:30 மணி நிலவரம்
 
இந்திய சந்தைகள் இன்று ஆரம்பம் முதலே சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 174 புள்ளிகள் சரிந்து 29384 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 8862 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 143 ரூபாய் விலை குறைந்து 27,759 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 ரூபாய் குறைந்து 2,772 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.48 ரூபாயாக உள்ளது. 
 
அமெரிக்க பெடரல் வங்கி வரும் ஜூன் மாதம் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்பதால் சந்தையில் இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க சந்தைகளில் காணப்பட்ட சரிவு இந்திய சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டிஎல்எஃப்          1.10%
சிப்லா          0.92%
ஹச்டிஎஃப்சி  0.92%
ரிலையன்ஸ்  0.90%
டெக் மஹிந்த்ரா  0.79%
 
விலை குறைந்த பங்குகள்:
 
கோல் இந்தியா         -4.06%
ஐசிஐசிஐ வங்கி  -2.07%
பாரதி ஏர்டெல்          -1.94%
ஜின்டால் ஸ்டீல்          -1.71%
சன் பார்மா                  -1.67%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ