Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை: விரைவில் வெளியிடப்படும்!

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (Foreign Trade Policy 2014-19) வெளியாவதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வந்ததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் சற்று அதிருப்த்தியுடன் காணப்பட்டார்கள். பொதுவாக வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வர்த்தகக் கொள்கையில் சில சலுகைகளானது இடம்பெறும்.

நடப்பு நிதி ஆண்டில் பத்து மாதங்கள் முடிந்துவிட்ட போதிலும், எஃப்டிபி இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "வர்த்தகக் கொள்கையை வெளியிட வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது. மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க வரிச்சலுகையும் அறிவிக்க வேண்டும். இதனால்தான் காலதாமதம் ஆகிறது. இனி இந்நிலையானது தொடராது. இதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டு விரைவில் எஃப்டிபி அறிவிக்கப்படும்" என்று சமீபத்தில் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இந்த அறிவிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ