Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்: சலுகைகள் அறிமுகம்!

விமான நிறுவனங்களில் ஏர் ஆசியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரு நிறுவனங்களும் தனது பயணிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குவார்கள். அந்த வகையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணச் சீட்டு கட்டண குறைப்புச்  சலுகையை அறிவித்திருக்கிறது. சலுகையுடன் கூடிய டிக்கெட் கட்டணமானது ரூ.1,499-லிருந்து ஆரம்பமாகிறது.

இதன் முன்பதிவுக்காக ஐந்து லட்சம் சீட்டுகளை ஒதுக்க இந்த நிறுவனமானது திட்டமிட்டிருக்கிறது. பிரவரி 15 முதல் ஜுன் 30 வரை ஸ்பைஸ்ஜெட்டில் பயணம் செய்ய நினைப்பவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ