Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை ரியல் எஸ்டேட்: 2014-ல் புதிய ஃபிளாட் திட்டங்கள் 25% குறைவு..

சென்னை ரியல் எஸ்டேட்:
2014-ல் புதிய ஃபிளாட் திட்டங்கள் 25% குறைவு..
 
நைட் ஃபிராங்க் இந்தியா,  இந்தியா ரியல் எஸ்டேட் அவுட்லுக் என்ற பெயரில்  2014 ம் ஆண்டு, ஜுலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்னை நகரின் குடியிருப்பு மற்றும் அலுவலக சந்தை செயல்பாடுகள் குறித்த பகுப்பாய்வினை  வெளியிட்டுள்ளது. 
 
குடியிருப்புகள் பகுப்பாய்வு:-
· சென்னை குடியிருப்பு சந்தை மெதுவாக பயணிக்கிறது, கிரகிப்பு 14% வீழ்ச்சி
· மௌலிவாக்கம் கட்டிட விபத்து இன்னும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது.  புதிய அறிமுகங்கள் 2014 – ல் 25% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ·
ஆர்பிஐ – ன்  வட்டி விகிதம் குறைப்பு, வீடு வாங்குபவாகளின் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. 
 
அலுவலக பகுப்பாய்வு:-
· சென்னை  அலுவலக சந்தை ஆரோக்கியமான போக்கினைக் கொண்டுள்ளது, 2014 – ல் 7 சதவிகித கிரகிப்பினை பதிவு செய்துள்ளது
 
 
 காஞ்சனா கிருஷ்ணன்
 
நைட் ஃபிராங்க் இந்தியாவின் சென்னை - இயக்குனர், காஞ்சனா கிருஷ்ணன்  கூறும் போது, “சென்னை குடியிருப்பு சந்தை 2014 – ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் புதிய வீடுகள் அறிமுகம் மற்றும் விற்பனையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. எனினும், ஆர்பிஐ – ன்  வட்டி விகித குறைப்பு, சந்தையில் ஒரு நேர்மறை கண்ணோட்டத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் 2015 – ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் (ஃபிளாட்) எண்ணிக்கை உயரும் என எதிர்நோக்கப்படுகிறது"என்றார்
“அலுவலக ரியல் எஸ்டேட் பிரிவில் காலி இடங்கள்  தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் நல்ல கிரகிப்பு அளவுகள் காணப்படுகிறது. நடப்பு சூழலின் அடிப்படையில், வாடகை  உயரும் என்னும் மற்றும் கிரகிப்பு அளவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்நோக்கப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ